ஜெய் நடிக்கும் புதிய படம் தயாராகிறது

எஸ்.எஸ்.டி.பிரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, உருவாகி வரும் இத்திரைப்படத்தை  எஸ்.எஸ்.டி.பிரொடெக்‌ஷன் சார்பாக  ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் நடக்க இருக்கிறது.