சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் குமரன்

தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் நடித்து வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன். எதிர்காலத்தில் நல்ல லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் பெரிய ஆசைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் லவ், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறுகிறார். தனது திறமைகளை பல்வேறு கதைகளின் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து கதைகள் கேட்டு வருகிறார்.********

சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில் தொடரும் குமரன், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் பார்வையாளர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் முன்னேறி வருகிறார். புதிய கதைகள், புதிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேலும் விரிவாக்க தயாராக இருக்கும் இளம் நடிகராக குமரன் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார்.