இசைப் பேய் திரைப்படம் உருவாக்கம்

“வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து  பேட்லர்ஸ்  சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக  உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. கருப்பையா முருகன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தின்  முதல்நாள் படப்பிடிப்பில் கதையின்நாயகனாக நடிக்கும் பிரேம்ஜி மற்றும் மெல்வின் டேவிட் ,  சாகித்யா, மாஸ்டர் ஆதர்ஷ் ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அனுஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.  பிரேம்ஜி இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.  எடிட்டிங் விதுஜீவா.   தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.