கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து  குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை அறிவித்துள்ளது. குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு  திரைப்படப் பயணம் தொடங்குகிறது. நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இயக்குநர் மோகன் ராஜா  திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடுகிறார். எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நட்சத்திர பட்டாளமும், வலுவான தொழில்நுட்ப குழுவும் இடம்பெறவுள்ளன. **********

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். இப்படத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும்போது, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், “ஒரு புதிய பயணம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.