ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா. மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை பயணித்தது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது இசை, வீடுகள், கோயில்கள், இசை அரங்குகள் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் தயாராகுகிறத. இப்படத்திக் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.******
ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய இசை அரங்குகளை நிரப்பிய அந்தக் குரல், இப்போது வெள்ளித்திரையிலும் புதிய தலைமுறையினரை சென்றடைய இருக்கிறது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதை இனி ஒரு நினைவாக மட்டும் இருக்காது. அது ஒரு திரைப்பட மரபாக மாறுகிறது.

