கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ காணொளி வெளியீடு

கார்த்தி கதாநாயகனாக, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பாளராக வேலுக்குட்டி பணியாற்றியுள்ளனர்..********

காணொளி வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பரவலாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.