-ஷாஜஹான்-
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த், நாகா அர்ஜுனா, சவுபின் ஷாஹிர். அமீர்கான், உமேந்திரா, சத்யராஜ், சுருதிஹாசன், பூஜா கெஹ்டே, ரேபா மோனிகா ஜான், கண்ணா ரவி, மோனிஷா பிளை, காளி வெங்கட், சார்லி, ஐயப்பா சர்மா, ரட்ஷிதா ராம், லொள்ளு சபா மாறன். திலீபன், தமிழ், ரிஷிகாந்த், ஜூனியர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கூலி”. நாகப்பட்டிணம் துறைமுகத்தை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து உலகளவில் கடத்தல் தொழில் செய்து வருகிறார் நாகர்ஜுனா. அவருக்கு உதவியாளராக சவுபின் ஷாஹிர் ஆயிரக்கணக்கான கூலியாட்களை அடிமைப்படுத்தி துறைமுகத்தை விட்டு யாரும் வெளியேறாமல் பார்த்துக் கொள்கிறார். கூலியாக இருக்கும் காளி வெங்கட் போலீசுக்கு தகவல் கொடுப்பதை அறிந்த சவுபின் ஷாஹிர் அவரை கொலை செய்து கடலில் வீசிவிடுகிறார். அத்துடன் அவ்வப்போது சில கூலியாட்களையும் கொலை செய்து கடலில் வீசி விடுகிறார். தாதா நாகா அர்ஜுனாவுக்கு உடந்தையாக இருக்கும் சில போலீஸ் அதிகாரிகள் கொலை செய்து உடலை கடலில் வீசுவதை நிறுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். இது ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் சென்னையில் ரஜினிகாந்த் தேவா என்ற பெயரில் ஒரு விடுதியை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு மிக குறைந்த வாடகையில் இலவச உணவுடன் தங்கிப்படிக்க ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர் சத்யராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் ரஜினிகாந்துக்கு வருகிறது. சத்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மலர் மாலையுடன்வரும் ரஜினிகாந்தை, சத்யராஜின் மகள் சுருதிஹாசன் சத்தம்போட்டு அவமதித்து வெளியே அனுப்புகிறார். அதை பெரிதுபடுத்தாமல் ரஜினிகாந்தும் வெளியேறி தன் நண்பனை கொலை செய்தவனை கண்டுபிடிக்க நாகப்பட்டிணம் துறைமுகத்தில் கூலியாளாக வேலைக்கு வருகிறார். சத்யராஜை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? சத்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த ரஜினியை ஏன் சுருதிஹாசன் வெளியே அனுப்பினார்? சத்க்யராஜ் ரஜினிகாந்த் சுருதிஹாசன் இவர்களுக்குள்ளிருக்கும் உறவு என்ன? கூலியாட்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள். பிணங்களை கடலில் வீசாமல் அவைகளை எப்படி அப்புறப்படுத்தினார்கள்? என்பதை பல அதிரடியான திருப்பங்களுடன் சொல்வதுதான் “கூலி” படத்தின் கதை, ரஜினிகாந்தை நவீனதொழில் நுடபத்தின் மூலம் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் காட்டியிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முந்தைய படங்களில் சண்டை காட்சிகளில் துள்ளித்துள்ளி சணடையிடும் ரஜினிகாந்த் இந்தப்படத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டு இரு கைகளையும் சிலம்பம் சுற்றுவதுபோல் சுழற்றி சுழற்றி எதிரிகளை தாக்குவது ரசிக்கும்படி உள்ளது. சண்டைக்காட்சிகளில் இளமைக்கால முகத்தைக்காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அதிகமான உழைப்பை தந்து நடித்திருக்கிறார். இது இந்தியபடமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலியுட்டின் உச்சநட்சத்திர நடிகர்களை வளைத்து போட்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களை சரியான முறையில் பயன்படுத்த தவறியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சிக்கு மட்டும் வரும் அமீர்கானை பீடிக்கு விளம்பரப்படுத்தியிருப்பது வேதனைக்குறியது. உமேந்திரா நிற்குமிடம் தெரியவில்லை. தெலுங்கின் உச்ச நட்சத்திர கதாநாயகனான நாகா அர்ஜுனா வில்லனாக நடித்திருப்பதை அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். வில்லத்தனத்திலும் நாகா அர்ஜுனா ஜொலிக்கிறார். இப்படத்தின் முழுமையான வில்லன் பாத்திரத்தை சவுபின் ஷாஹிருக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். படத்தின் இரண்டாம் பாகம் முழுவதிலும் அநேக மறைமுக திருப்பங்களை வைத்து பாரவையாளர்களை சலிப்படைய வைத்திருக்கிறார். சுருதிஹாசனின் நடிப்ப் அபாரம். தங்கைகளை காப்பாற்ற போராடும் காட்சிகளிலும் ரஜினிகாந்தை பிரிந்து செல்லும் கட்டத்திலும் தனது உணர்வுகளை கண்களின் மூலமாக வெளிப்படுத்தி நடிப்பதில் கமல்ஹாசனின் மகள் என்பதை நிரூபித்துருக்கிறார். அருமையான நடிப்பு. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்துள்ளார். அனிருத்தின் பாடல்கள் தாளம்போட வைக்கிறது..