பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் – டி.ராஜேந்தர் இரங்கல்

கன்னி தமிழ் மணக்க
கணீர் குரல் ஒலிக்க,
வெண்கல குரலுக்கு சொந்தக்காரர், வேணுகானம் இசைக்கும் பாட்டுக்காரர், மாணிக்க விநாயகமே, மங்கா தமிழகம்தான் உங்கள் தாயகமே,

நோய் வந்து உங்களை ஏன் வாட்டியது? எமலோகத்திற்கு யார் வந்து உங்கள் வாகனத்தை பூட்டியது

நண்பா எமதர்மன் சபைக்கு பாட்டிசைக்க புறப்பட்டாயோ, எங்கள் கலையுலகை மறந்துவிட்டாயோ, இம்மண்ணுலகை விட்டு மறைந்து விட்டாயோ

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே

அன்னாரை இழந்து வாடும் தமிழ் திரையுலகத்திற்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர்,
தலைவர்,
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.
கௌரவ ஆலோசகர்,
தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.