பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சிஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள்போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி …

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தஞ்சை – தமிழ்ப் பல்கலைக்கழகம்,  மதுரை-உலகத் தமிழ்ச் சங்கம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், …

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் Read More

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 16.7.2021 அன்று காணொலிக் காட்சி மூலமாக பேசும் போது, “இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு ஊக்கமளிக்கும் அரசாக இருக்கும். இந்த அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நீங்கள் அனைவரும் பதக்கத்துடன் வரவேண்டும். அனைவரும் பதக்கம் …

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில் “வென்று வா வீரர்களே” என்ற பாடலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். Read More

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர்

கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் …

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர் Read More

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்.

சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறையின் கூட்டரங்கில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினைப் பழமைமாறாமல் புதுப்பித்தல் தொடர்பான பெருந்திட்ட ஆய்வுக்கூட்டம் 17.07.2021 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு,மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும்கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் திருமதி.கனிமொழி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்தினால் நியமனம்செய்யப்பட்ட கட்டிடக்கலை வல்லுனர்களால்திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலினைப் பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும்பெருந்திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகள் தொடர்பான முதல்கட்டவிளக்கக் காட்சியில் திருக்கோயிலின் கட்டுமானம், பக்தர்களின் அடிப்படை வசதிகள், முக்கிய திருவிழாக்காலங்களில் அதிகப்படியான பக்தர்களைஈர்க்கும் வகையில் மேலாண்மை செய்தல், காற்றோட்டவசதிகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகள் கலந்தாய்வுசெய்யப்பட்டன. இத்திருக்கோயில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்பல்வேறு பகுதிகளாகப் பிரித்து செயல்பட வேண்டியுள்ளது.குறிப்பாகத் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின்பயன்பாட்டிற்காக அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிவுநீர் மேலாண்மை, மின்னாளுமை, வாகனம் நிறுத்தும்இடங்கள், ஒளியமைப்பு இவைகளை அதிக செலவின்றிதரமானதாக அமைத்தல் மற்றும் மின் சிக்கனத்தையும்கருத்தில் கொள்ளுதல், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபின்னர் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், பக்தர்கள் வரிசையில் ஓய்வெடுப்பதற்கான இடங்களில்கழிப்பறை, குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகள் இப்பெருந்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயில் வளாகத்தில் அதிகளவிலான திருமணங்கள்ஒரே நாளில் திருக்கோயிலில் நடைபெறும் போது அவற்றைமேலாண்மை செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில்இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார்வாகனங்கள் ஓர் இடத்தில் முறைப்படுத்தப்பட்டு அங்குஇருந்து திருக்கோயிலுக்கு மினி வாகனம் இயக்கப்படவேண்டும் எனவும், திருக்கோயில் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு மேற்படிதிட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரைகள்வழங்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள்துறை முதன்மைச் செயலாளர், முனைவர்பி.சந்திர மோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர், ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல்ஆணையர், திரு.கண்ணன், இ.ஆ.ப., திருச்செந்தூர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தக்கார், திரு.கண்ணன், விளாத்திகுளம், சட்டமன்ற உறுப்பினர வி.மார்க்கண்டேயன், எச்.சி.எல் நிறுவன கட்டிடக்கலைவல்லுனர் திருமதி.ஸ்ரீமதி உட்பட பல அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் புதுப்பித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம். Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக்கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில்தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும்,காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின்நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துமுடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–7–2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துச்சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்           திரு. துரைமுருகன்கலந்துகொண்டார்.  அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் …

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம் Read More

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு

கொரோனா நோய்த் தொற்று பரவலைக்குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின்உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குநடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்றுகாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்துகட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்டசெயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடைவிதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) • மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து • திரையரங்குகள் • அனைத்து மதுக்கூடங்கள் • நீச்சல் குளங்கள் • பொது மக்கள் கலந்து கொள்ளும்சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள் • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரநிகழ்வுகள் • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்  • உயிரியல் பூங்காக்கள் • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகதிருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர்.  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுவர். …

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும்ஒரு வாரம் நீட்டிப்பு Read More

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்துறையின்தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்அவர்கள் இன்று (8.7.2021) தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினார். ​இக்கூட்டத்தில், பல்வேறு அரசுத்துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களைக் கண்டறிந்து, விரைந்து நிரப்பிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான Post Matric மற்றும் Pre Matric கல்வி உதவித்தொகை, உயர்கல்விசிறப்பு உதவித்தொகை, முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகை ஆகிய கல்விஉதவித்தொகைத் திட்டங்களை எவ்விதத் தொய்வுமின்றி உரிய காலத்தில் மாணவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முதலமைச்சர்  அறிவுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் சென்று முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புப் பயிலும் மாணவர்களுக்கானகல்வி உதவித்தொகைத் திட்டத்தினைச் சீரமைத்திடஉரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். ​வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தின்கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ளபயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிட வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் பழங்குடியினர்துணைத் திட்டங்களின்கீழ்ச் செயல்படுத்தப்படும்திட்டங்களின் பயன் உரிய பயனாளிகளைச்சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டும் என்றும்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார். ​ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உரிய முறையில் அமல்படுத்ப்ப. டுவதைக் கண்காணிக்க வேண்டும்எனவும், இச்சட்டத்தின் கீழ் தொடரப்படும்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் வலியுறுத்தினார்.  ​ ​ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் செயல்படுத்தப்பட்டு வரும. அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை முதலமைச்சர் ஆய்வுசெய்ததோடு, கூடுதலாக வசதிகள் தேவைப்படும்குடியிருப்புகளைக் கண்டறிந்துஅக்குடியிருப்புகளுக்கு அனைத்து அடிப்படைஉட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கிடவேண்டும்என்றும் கேட்டுக் கொண்டார்.  ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பஞ்சமிநிலங்கள், ஆதிதிராவிடர் அல்லாத பிறஇனத்தவர்களிடம் இருப்பதைக் கண்டறிந்து,  அவற்றை மீட்டு, ஆதிதிராவிடர்களிடமே திரும்பஒப்படைக்கும் பணியை விரைந்து செயல்படுத்துமாறுமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். ​வறிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினரின் சமூக மற்றும் பொருளாதாரமுன்னேற்றத்திற்காக தாட்கோ மூலம்செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வுசெய்தமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துரித மின்இணைப்புத் திட்டத்திற்கான வைப்புத் தொகையினைஉயர்த்திட உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரியம், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நலவாரியம்,  தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரியம், தமிழ்நாடுபழங்குடியினர் ஆன்றோர் மன்றம், மாநிலஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகள்குறித்தும் விவாதிக்கப்பட்டது.  ​இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாண்புமிகுஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர்முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,  நிதித்துறைக்கூடுதல் தலைமைச் செயலாளர்  ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச்செயலாளர் எஸ். பழனிசாமி, இ.ஆ.ப.,  ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் எஸ். மதுமதி, இ.ஆ.ப.,  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், இ.ஆ.ப., சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின்கூடுதல் காவல்துறை இயக்குநர் எச்.எம். ஜெயராம், இ.கா.ப.,   பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.வி.சி.ராகுல், இ.வ.ப.,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினமாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளைஉரிய காலத்தில் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அறிவுரை Read More