தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருட காலமாகவே பள்ளிகள் திறக்கப்படவில்லை. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் மூலம் …

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வானொலி வாயிலாக பாடங்கள் Read More

தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின்

அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம்! கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டுவருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால்அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக்கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியமருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்தநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாள் ஒன்றுக்கு 36 ஆயிரத்தைத் தொட்ட தொற்றுப் பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு – மருத்துவர்களின் அர்ப்பணிப்பு – மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு – துடிப்பான நிர்வாகம்ஆகிய நான்கின் காரணமாகவும்தான் இந்தளவுக்கு நாம்வெற்றியைப் பெற முடிந்தது. இன்றைய தகவல்களின்அடிப்படையில் ஏராளமான படுக்கைகள் தயார் நிலையில்இருக்கின்றன. ஆக்சிஜன் படுக்கைகளாக இருந்தாலும் – தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக இருந்தாலும்ஏராளமாக உள்ளன. எந்த அலையையும் தாங்கும் வல்லமை இந்த அரசுக்குஉண்டு. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டுஎன்பதை நானும் அறிவேன்! நான் இப்போது நாட்டு மக்களிடம் சொல்ல விரும்புவதுஒன்றே ஒன்றுதான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம்என்று சொல்ல முடியாது. எனவே, மக்கள் யாரும்அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் – அதனால் நாம் எந்தவிதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும்நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல் மற்றும் சமுதாய விழாக்கள்அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத்திறக்கவில்லை. பூங்காக்கள் திறக்கவில்லை. ஏனென்றால்இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள்.இப்படித் திறக்காமல் இருக்கிறோம் என்றால், ஏன் என்றகாரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன்இருக்க வேண்டும். உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியார்அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான். முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம்பாதிக்கப்படுகிறது, அவசியமான பொருள்களைக் கூடவாங்குவதில் சிரமம் இருக்கிறது, அதேபோல் மாநிலத்தில்பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது – ஆகிய மூன்றுகாரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். இந்த தளர்வுகளுக்கு உள்ளார்ந்த பொருள் இதுதான்.அதனைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரியஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள்அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசிபோட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்குவழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும்முழுமையாக நமக்கு வழங்கவில்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்துஇன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை.குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள்நடந்துகொண்டு இருக்கின்றன. இப்படி எல்லாத்தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்.அப்படிச் செலுத்துவதை மக்கள் இயக்கமாகவேமாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காதநிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன்இருந்தாகவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நான்வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும்தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டைவிதித்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு, அவசியத்தின்காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படிவரும்போதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப்பின்பற்றுங்கள். * வீட்டை விட்டு வெளியில் வரும் எல்லோரும் முகக்கவசம்அணியுங்கள். * கூட்டமாகக் கூடுவதை தவிர்த்துவிடுங்கள்.  * வரிசையில் நின்று வாங்குங்கள்.  * வரிசையில் நிற்கும்போதும் போதிய தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள்.  * பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும் – அதிகமான கூட்டம் இருக்கும் இடத்திலும் இரண்டு முகக்கவசங்களைக் கூட பயன்படுத்தலாம்.  * கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினிகொண்டு சுத்தம் செய்யுங்கள்.  * கடைகளில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசங்கள் பயன்படுத்துங்கள்.  * அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியாற்றுங்கள்.  * கடைகளின் நுழைவாயில்களில் கை சுத்திகரிப்பானை வையுங்கள். உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் கொண்டு பரிசோதனை செய்யுங்கள்.  * கடைகளுக்குள் ஒரே நேரத்தில் அதிகப்படியானஆட்களை அனுமதிக்க வேண்டாம்.  * நோய்த்தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். நீங்களாகவே தெரிந்த சிகிச்சை முறைகளைச் செய்து கொள்ள வேண்டாம்.  – இவை எல்லாமே மிகமிகச் சாதாரணக் கட்டுப்பாடுகள்தான்.இதனைப் பின்பற்றி நடந்து கொண்டாலே கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களேபோட்டுக்கொள்ளக் கூடிய சுய கட்டுப்பாடுகளாக மாறவேண்டும்.  அந்த அடிப்படையில் ஒவ்வொரு மனிதரும் தங்களுக்குத்தாங்களே காவல் அரணாக இருக்க வேண்டும். தளர்வுகளின்போது கட்டுப்பாட்டு விதிமுறைகளைமீறினால்தான் மூன்றாவது அலை வரக் கூடிய சூழல் எழும்என்கிறார்கள் மருத்துவர்கள். கட்டுப்பாடுகளை நாம்ஒழுங்காகக் கடைப்பிடித்தால் எந்த அலையும் உள்ளே வரமுடியாது. எனவே மக்கள் எல்லாரையும் நான் கேட்டுக் கொள்வது – தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்கவேண்டாம். விதிக்கப்பட்ட விதிமுறைகள் அமலில்தான் உள்ளன. விதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால்கொரோனாவை வெல்வோம்.

தளர்வுகள் தரப்பட்டுவிட்டது என்று சொல்லி விதிமுறைகளை மீறி நடக்க கூடாதென்கிறார் முதல்வர் ஸ்டாலின் Read More

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 …

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு Read More

கொரோனா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் மகத்தான பணிபுரிந்தமருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்துமற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசுகொரோனா மருத்துவமனையில், சட்டமன்றப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர்உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு,புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்குபிந்தைய நல்வாழ்வு மையத்தை (Post Covid Care Clinic) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1.7.2021 அன்று திறந்துவைத்தார். இம்மையத்தில் கொரோனாதொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம், நரம்பியல், சிறுநீரகம், வயிறு மற்றும் குடல், கண், நீரழிவு, உளவியல் தொடர்பான சிகிச்சைகள்அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் இயற்கைமருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும்இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, இந்த வளாகத்தில்மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார்கள். இம்மையம், மாநிலங்களவைமுன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்குபன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படிஆப்பிரிக்க மற்றும்  தென் அமெரிக்கநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல்  இருந்து  மஞ்சள்  காய்ச்சல் தடுப்பூசி மற்றும்போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டு, உலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தென்இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநிலஅரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாகஇந்நிலையம் விளங்குகிறது. மேலும், ஹஜ் பயணம்மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர், சென்னை, தமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில்நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் முதலமைச்சர மு.க. ஸ்டாலின் தலைமையேற்று, அரசுமருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களைமருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ மற்றும்ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம்மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்(ESI), இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் ஆகியோருக்கும், தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறுமருத்துவச் சங்கங்களுக்கும் வழங்கி கௌரவித்தார்.மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனமக்களுக்கும், தேயிலை தோட்டங்களில்பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகிததடுப்பூசி போடப்பட்டு, இந்தியாவிலேயே முதல்மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிடசெய்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிபாராட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம்அவர்களிடம் 55,000 Pulse Oxymeter கருவிகளைசுகாதாரத் துறை பணியாளர்களின்பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கி, மாநில தலைநகரம்மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை (War Room) செயல்பாடுகளை விளக்கும் குறும்படதகட்டினையும் வெளியிட்டார்.நிகழ்வின் இறுதியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவர் தினவிழாவில் பேசியதாவது: அனைவருக்கும் அன்பான வணக்கம். இன்று மருத்துவர் தினம். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக்கான அரசுமட்டுமல்ல, மருத்துவர்கள் நலனுக்கான அரசாகஉங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதைஎடுத்துச் சொல்லி, மருத்துவ தின விழாவில் உங்கள்அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புபெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, உங்களுடைய தியாகத்திற்கும் தொடர்ந்துஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி. இந்நிகழ்வுகளில், மாண்புமிகு மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம்கவி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்திரு.டி.கே. ரங்கராஜன், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நல வாழ்வு குழுமஇயக்குநர் மரு. தாரேஸ் அகமது, இ.ஆ.ப., இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் திரு. சு.கணேஷ், இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் முனைவர்ச. நடராஜன், இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவசேவைக் கழக இணை இயக்குநர் திரு. தீபக்ஜேக்கப், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் திரு.டி.என். ஹரிஹரன், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரதிட்ட இயக்குநர் மரு. எஸ். உமா, இ.ஆ.ப., திரு.சுகி சிவம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.  

கொரோனா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் மகத்தான பணிபுரிந்தமருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

எம்.கே.டி.’’ என்று அன்போடு அழைக்கப்பட்டதிரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள், தமிழ்த் திரைப்பட உலகின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத பாடகருமாகத் திகழ்ந்தவர் ஆவார். அவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944 ஆம் ஆண்டு வெளியான “ஹரிதாஸ்’’ என்னும் திரைப்படத்தில் …

எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் புல எண் 5/2 – 1.49 ஏக்கர் மற்றும் புல எண். 6/3 – 0.58 ஏக்கர் என மொத்தம்ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் நிலத்தில் பல வருடங்களாக11 நபர்களால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு இந்து சமய …

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம் Read More

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் இன்று  (27.6.2021) ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் திரு.என். ராம், மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் திருமதி லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் திருமதி இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் …

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள் Read More

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்

கொரோனா பெருந்தொற்று ஒன்றியஅரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல்தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில்நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள …

மத வழிபாடு நடத்த அனுமதி அளித்தார் முதல்வர் மு க ஸ்டாலின் Read More

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களேதடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தைபெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்தபேரறிஞர் அண்ணா அவர்களையும், தனித்தனி ஊரில்பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச்சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்அவர்களையும் நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத்தொடங்குகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கடந்த 21 ஆம் தேதி, இந்த மாபெரும் சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசின்நோக்கங்களையும், எண்ணங்களையும் எடுத்துக்காட்டக்கூடிய  நல்லதோர் உரையைஆற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசின்முதலமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்டநிலையிலும் எனது மனமார்ந்த நன்றியை நான்தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாண்புமிகு ஆளுநர் அவர்களது உரை மீதானவிவாதத்தில் உரையாற்றிய அனைவருக்கும் நன்றிதெரிவித்து, எனது உரையைத் தொடங்கும்அதேவேளையில், என்னை இந்த மாமன்றத்திற்குத்தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய கொளத்தூர்தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும், திராவிடமுன்னேற்றக் கழகம் பெற்ற மகத்தான வெற்றிக்குக்காரணமான அனைத்து கழக உடன்பிறப்புகளுக்கும், தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழமைக்கட்சியினருக்கும், பெரும் எதிர்பார்ப்புகளுடன்தங்களுக்குச் சேவை செய்வதற்கான பெரும்வாய்ப்பினை எங்கள் மீது நம்பிக்கை வைத்துவழங்கியிருக்கக்கூடிய அருந்தமிழ்நாட்டுமக்களுக்கும், முதற்கண் என்னுடைய நன்றியையும்,வணக்கத்தையும் இந்தத் தருணத்தில்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர்”என்ற இந்த அரியஆசனத்தைப் பார்க்கும்போதும், அதிலேஅமரும்போதும், என்னுடைய எண்ணங்கள், கடந்தஒரு நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகளையும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அந்த வரலாற்றைப்படைத்த தனிப்பெரும் நாயகர்களையும் சுற்றிச்சுழல்கின்றன. அதன் காரணமாக மெய்சிலிர்ப்பும், பிரமிப்பும், வியப்பும், உண்டாகின்றன. குறிப்பாக, திராவிட இயக்கத்தின்முன்னோடியான நீதிக் கட்சி, 1920 ஆம் ஆண்டு முதல்1937 ஆம் ஆண்டுவரை சுமார் 17 ஆண்டுகள்தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. முதன்முதலாக சமூகநீதிக்கான ஆணைகளை வழங்கி, வடமொழிஆதிக்கத்தைத் தகர்த்து, மகளிருக்கானஉரிமைகளை அங்கீகாரம் செய்து, அவர்களுக்குப்பிரதிநிதித்துவம் தந்து, கல்வித் துறையில்சீர்திருத்தங்களைப் புகுத்தி, சமுதாயமாற்றங்களுக்கான விதைகளை விதைத்து, சமூகநீதியை நீர் ஊற்றி வளர்த்த கட்சி. ஆங்கிலேயரின்இரட்டை ஆட்சி முறையில், மிகவும் குறைவான சட்டஅதிகாரங்களை வைத்துக் கொண்டு, தொலைநோக்குத் திட்டங்களையும் அக்காலத்தில்எவரும் சிந்தித்திராத சீர்திருத்தங்களையும்நிறைவேற்றிய கட்சி.  திராவிட இயக்கத்தின் தாய்க்கழகமான நீதிக் கட்சி, சென்னை மாகாணத்தில்ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்து 100 ஆண்டுகள்கடந்துவிட்டது.   அன்றைக்கு இருந்த மிகக் குறைவானஅதிகாரங்களைக் கொண்டே வகுப்புவாரிஉரிமையை நிலைநாட்டியது நீதிக் கட்சி; பட்டியலினமக்களது நலனைப் பேணியது நீதிக் கட்சி;திருக்கோயில்களைக் காத்தது நீதிக்கட்சி;அத்தகைய நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்து 100 ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்குவந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.   தியாகராயரும், நடேசனாரும், டி.எம். நாயரும்போட்ட சமூகநீதி – சமத்துவ சமுதாயம் காணும்அடித்தளத்தில் அமைந்துள்ள ஆட்சிதான் இன்றையதி.மு.க. ஆட்சி.  1967 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக்கழகம் அமர்ந்தபோது, “நீதிக் கட்சி ஆட்சியின்தொடர்ச்சிதான் இந்த ஆட்சி” என்று பேரறிஞர்அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதேவழியில்,எங்களது ஆட்சியும் நீதிக் கட்சியின் தொடர்ச்சிதான்என்பதைப் பெருமையோடு நான் சொல்லிக் கொள்ளவிரும்புகிறேன்.     நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர்கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சிநான்! ஏன், இந்த அரசு!  தமிழினத்தை நம்மால்தான்வாழ வைக்க முடியும் – தமிழினத்தை நம்மால்தான்வளர்ச்சி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையோடுதி.மு.கழகத்தை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்தமிழ்நாட்டு மக்கள்! இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாடு எட்டவேண்டிய இலக்கை, எமதுதொலைநோக்குப் பார்வையைத்தான் மாண்புமிகுஆளுநர் அவர்கள் தமது உரையில் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.   அன்று நீதிக்கட்சியின் முதலாவது (First Prime Minister) பிரதம அமைச்சராக இருந்த கடலூர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் அவர்கள், காங்கிரஸ்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தபெருந்தலைவர் காமராஜர் அவர்கள், திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தி, முதலமைச்சராக இருந்தபேரறிஞர் அண்ணா அவர்கள், 5 முறை முதலமைச்சர்பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்தசாதனைச் செல்வர், நம்முடைய முத்தமிழறிஞர்கலைஞர் அவர்கள்  ஆகியோரையும், முதலமைச்சராகஇருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும், இந்த நேரத்தில் நினைவுகூர்வது என்னுடைய கடமைஆகும். நமது முன்னோர்களை நினைவுகூர்வதுஎன்பது, தமிழர் பண்பாட்டின் தவிர்க்க முடியாதமுக்கியமான கூறு என்பதை மறந்துவிட முடியாது.   கடந்த 2 நாட்களாக இந்த அவையிலே நடந்திருக்கக்கூடிய விவாதத்திலே, திராவிடமுன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசியகாங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதாகட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழகவாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளைச் சார்ந்த 22 மாண்புமிகு உறுப்பினர்கள், ஆளுநர் உரையின் மீது, தங்களுடைய சீரிய கருத்துகளை மையப்படுத்திஇங்கே உரையாற்றி இருக்கிறார்கள். உரையாற்றியஉங்கள் அனைவரது கருத்துகளையும் இந்த அரசுக்குநீங்கள் சொல்லும் ஆரோக்கியமானஆலோசனைகளாகவே நான் எடுத்துக் கொள்கிறேன்.  ஏனென்றால் நான் பேரறிஞர் அண்ணாவினுடையஅரசியல் வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞருடையகொள்கை வாரிசு. சட்டமன்ற உறுப்பினர்கள்பேசும்போது முன்வைத்த கோரிக்கைகள் – தொகுதிசார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளன. துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்துநிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதை நான் இந்த நேரத்திலேதெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஐந்து ஆண்டுகால ஆட்சி உரிமை கொண்ட அரசுஇது. இதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் – கொள்கைகள் – கோரிக்கைகள் ஆகியஅனைத்தையும் ஆளுநர் உரையில் மட்டுமேமுழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரைஎன்பது, அரசாங்கத்தின் ஓராண்டுக்கான கொள்கைவிளக்கச் சுருக்கம். அதில் அரசாங்கத்தின்ஐந்தாண்டுகளுக்கான நோக்கம், திட்டம், அணுகுமுறை, செயல்பாடுகள் என அனைத்தையும்அடக்கிவிட முடியாது. ஆளுநர் உரை ஒருமுன்னோட்டம்தான். அனைவருக்கும் எளிதில்புரியும்படி சொல்லவேண்டும் என்றால், இது ஒரு“ட்ரெய்லர்”மாதிரி.  “முழு நீளத் திரைப்படத்தைவிரைவில் வெள்ளித்திரையில் காண்க” – என்றுமுன்பெல்லாம் சொல்லப்பட்டு வந்ததைப்போல, இந்தஅரசு வகுத்திருக்கும் பாதை, அதில் மேற்கொள்ளஉள்ள பயணம், பயணத்தில் எதிர்கொள்ளவிருக்கிற இடர்ப்பாடுகள், அந்த இடர்ப்பாடுகளைக்களைந்தெறியும் சூட்சுமங்கள், சவால்கள் – அவற்றைச் சந்திப்பதற்கான சாதுரியங்கள் எனஅனைத்தும் விரைவில் இந்தப் பேரவையிலேவைக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் விரிவாகஇடம்பெறும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ளவிரும்புகிறேன். …

அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் என சட்டசபையில் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார் Read More

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,  மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசி அவர்கள், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறக்கூடிய வகையில், ஒரு தீர்மானத்தை இந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை இங்கே வைத்திருக்கிறார்கள். இந்த வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், …

ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபடுனெ அறிவித்தார் ஸ்டாலின் Read More