திராவிடர் கழகம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. ஆதரவு! வைகோ அறிக்கை

இந்தியவிடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர்வரும் சனவரி 26 – குடியரசு நாளில், புதுதில்லியில் நடைபெறும் அலங்கhரஅணிவகுப்பில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துவிட்டது. மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றதமிழ்நாடு அரசின் அணிவகுப்பை, ஒன்றிய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது. தமிழ்நாடு முதல்வரும்,தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டில்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்கமறுத்துவிட்டது.
 பலமுறை இதுகுறித்து எடுத்துவிளக்கிய பின்பும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும்வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்! தில்லி அரசு அனுமதிக்க மறுத்தஊர்திகள், தமிழ்நாடு அரசு நடத்தும் குடியரசு நாள் அணிவகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் தளபதி மு.க.Þடாலின்அவர்கள் அறிவித்த பின்பும், ஒன்றிய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது. குடியரசு நாள் விழாஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், ஒன்றிய அரசின் எதேச்சதிகhரப் போக்கினைக்கண்டித்து, சனவரி 26 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மறுமலர்ச்சிதி.மு.கழகம் வரவேற்கிறது; பாராட்டுகிறது! அனைத்துக் கட்சி அலுவலகங்கள்முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள்அனைவரையும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.