அயன் முகர்ஜி இயக்கத்தில் யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “வார் 2” திரைப்படம் ,2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள இந்த படத்தில் தனது காட்சிக்கு பின்னணிக் குரல்ப்பதிவு செய்யத் தொடங்கியிருப்பதைக் காட்டும் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் “வார் 2” திரைப்படம் யஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸின் ஆறாவது பாகமாகும். “வார் 2” படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியுடன் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கிறார்.*******
பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகளுடன் தீவிரமான, பரபரப்பான கதைக்களத்துடன் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் வார் 2 படம் ஒரு பரபரப்பான காட்சி அனுபவமாக இருக்கும் என படக்குழு உறுதியளிக்கிறார்கள் . இந்த படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .