ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா படமான, “பெத்தி”  ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பான்-இந்தியா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸுடன் இணைந்து வழங்கும், “பெத்தி”  இந்திய திரைப்படத் துறையில் ஒரு புதிய திருப்புமுனை படமாக இருக்கும். தொலைநோக்கு மிக்க  படைப்பாளி வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.  ஸ்ரீ ராம நவமியின் புனிதமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் முதல் ஷாட் வீடியோவை வெளியிட்டனர்,*******

நீண்ட முடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தியுடன் கூடிய ராம் சரணின் புதிய கரடுமுரடான தோற்றம், அவரது கதாபாத்திரத்தின் அழுத்தமான தன்மையை மேம்படுத்துகிறது, மேலும் அவரது ஆளுமைக்கு மேலும் தீவிரத்தைச் சேர்க்கிறது. அவரது டயலாக் டெலிவரி, மற்றும் உடல் மொழி எல்லாமே ரசிகர்களை வசீகரிக்கிறது. விஜயநகர பேச்சுவழக்கை அவர் குறைபாடற்ற முறையில் பேசுவது, ஒரு தனித்துவமான தருணம், இது அவரது வாழ்க்கையில் முதல் முறையாகும், இது அவரது கதாப்பாத்திர சித்தரிப்புக்கு நம்பகத்தன்மையையும் சக்தியையும் சேர்க்கிறது. இந்த ஃபர்ஸ்ட் ஷாட்டில் வரும் டயலாக் அவரது கதாபாத்திரத்தின் வாழ்க்கைத் தத்துவத்தின் சுருக்கமான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது, இது அவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியம் தருணமாக அமைகிறது. அவரது கரீஷ்மா “பெத்தி”   கதாபாத்திரத்தை அசத்தலாக வெளிப்படுத்துகிறது.