ஜி.வி. பிரகாஷ் குமார் நடிகும் புதிய படம் “மென்டல் மனதில்”

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலின் காணொளியை நடிகர்  கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  செல்வராகவன் இயக்கத்தில், உருவாகி வரும் ‘மென்டல் மனதில்’ திரைப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் – மாதுரி ஜெயின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்..*****

அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா நிர்வாக தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) நிறுவனம் சார்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.