ஜீவா நடிக்கும் புதிய படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’

ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு படமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக்  தயாரித்திருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் இந்தியா நிறிவனத்தின் செயல் அதிகாரி ராசிக் அஹ்மது சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.