சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி,ஓம் செல்வா ஆகியோரின் தயாரிப்பில், செ.ரா.ராஜேஷ் இயக்கத்தில், அருண் கார்த்தி, எனாக்க்ஷி கங்குலி, கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவணசக்தி, செ.ரா.ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பனிவிழும் இரவு”. கோடை விடுமுறையை கழிக்க தன் இளம் மனைவி எனாக்ஷி கங்குலியை அழைத்துக் கொண்டு கொடைக்கானலுக்கு செல்கிறார் அருண் கார்த்திக். கொடைக்கானலில் உள்ள அவர்களது பங்களாவில் தங்குகிறார்கள். காலையில் எழுந்து அருண் கார்த்திக் தனது மனைவிக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு அறைக்குள் வருகிறார். அறையில் மனைவி எனாக்ஷி கங்குலியை காணவில்லை. உடனே காவல் நிலையத்தில் தன் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்த்துறை ஆய்வாளர் சேரன்ராஜ் எனாக்ஷி கங்குலியை தேட இறுதிவரை எனாக்ஷி கங்குலிய. கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? அருண் கார்த்த்கிக் யார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்வதுதான் மீதிக்கதை.
அருண் கார்த்திக் காவல் நிலையத்தில் பதற்றமான நடிப்பில் அசத்துகிறார். காவல்ர்களிடம் தனது மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் என கெஞ்சுகின்ற காட்சி, மனைவி மீது அதிக பாசம் செலுத்தும் கணவன்மார்களின் உணர்வுகளை அப்பட்டமாக காட்டி நடித்துள்ளார். சபாஷ் அருண் கார்த்திக். எனாக்ஷி கங்குலி இன்னும் தனது நடிப்பை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். திரைவானில் சிட்டுக்குருவி பறக்கும் உயரத்தில் மட்டுமே பறக்கிறார். ஆய்வாளர் சேரன்ராஜ் காவல் ஆய்வாளராகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு மிடுக்கான நடிப்பு. அதிகம் பேசாத அமைதியான நடை. துப்பறியும்போது காட்டுகின்ற அதிவூட்டும் உணவுகளை திரையில் கொட்டி நடித்த்குள்ளார். மருத்துவராக வரும் கஜராஜின் கதாபாத்திரம்தான் உச்சக்கட்ட காட்சிக்கு வலு சேர்த்திருக்கிறது. மெய்யான மருத்துவராக பிரதிபலிக்கிறார் கஜராஜன். சரவண சக்தி, செ.ரா.ராஜேஷ், சுருளி, உமர், வினோத் உள்ளிட்ட இதர நடிகர் – நடிகைகளும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ற நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்கள். ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் ஒரு புதிய கோணத்தில் தனது கேமிராவை சுழற்றி விட்டிருகிறார். அதிக காட்சிகளை ஆகாயத்தில் பறந்தபடியே கொடைக்கானலை படம் பிடித்திருக்கிறார். மேக கூட்டத்தில் சிறைபட்ட மலையின் முகடுகளை திரையில் காட்டியிருக்கும் அழகே அலாதியானது. ஒளிப்பதிவாளரின் கடின உழைப்பு திரையில் நன்கு தெரிகிறது. சதாமுருகனின் இசை திரைக்கதையின் ஓட்டத்தோடு ஒன்றிப்போயிருகிறது. படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. விஞ்ஞானதின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு, இயக்குநர் செ.ரா.ராஜேஷ்
இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக் களத்தில் விளையாடியிருக்கிறார். கைத்தொலைபேசியின் வினோதத்தை மையக்கருவாக வைத்து ஒரு அதிர்வூட்டும் துப்பறிதழ் நாவலை படைத்திருக்கும் இயக்குநரை பாராட்டத்தான் வேண்டும்.

