பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘தேசியத் தலைவர் தேவர் பெருமான்’ திரைப்படம், 2025-ஆம் ஆண்டு ‘தேவர் ஜெயந்தி’ அன்று வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘தேசியத் தலைவர் 2’ எனும் புதிய திரைப்படம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் 2026-ஆம் ஆண்டு ‘தேவர் ஜெயந்தி’ அன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கதாபாத்திரத்தில் ஜே.எம். பஷீர் நடித்துள்ளார். திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை ஆர். அரவிந்த்ராஜ் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ஏ.எம்.சௌத்ரி இப்படத்தைத் தயாரிக்கிறார். வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இப்படம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூரில் நிகழ்ந்த கலவரங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
“தேசியத் தலைவர் 2” திரைப்படம் உருவாகிறது
