நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ ஐந்து மொழிகளில் வெளியீடு

நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் நிறுவனம் இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம்  2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்சன்ஸ் விநியோகம் செய்கிறது. இந்தப் படத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியத் திரையுலகின் சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்அருண் கோவில், தனது மறக்க முடியாத ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார். இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதன்மை கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராக நடித்துள்ளார். சீதா தேவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். யஷ் இராவணனாக நடித்துள்ளார். இப்படத்துக்கு ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.********

இந்தப் படைப்பின் மூலம், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள், உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, மனிதகுலத்தின் மிகப் பழமையான மகாகாவியங்களில் ஒன்றை இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் நோக்கமாகும்.