ஏ.ராஜா தயாரிப்பில் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் இயக்கத்தில் ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, சுப்பிரஅணிய சிவா, தலைவாசல் விஜய் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “4த் ஃபுளோர்”. கணனி தொழில்நுட்பத்துறையில் வேளைபார்க்கும் ஆரி அர்ஜூன் மும்பையிலிருந்து மாற்றுதலாகி சென்னைக்கு வருகிறார். சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிறுப்பிலுள்ள 4வது தளத்திலிருக்கும் ஒரு வீட்டில் குடியேறுகிறார். ஒருநாள் தன்னை காப்பாற்றும்படி அவரின் முன்னால் காதலியிடமிருந்து ஆரி அர்ஜூனனுக்கு ஒரு அழைப்பு வருமிறது. அதெ நேரத்தில் இரவு நேரங்களில் அவர் தங்கியிருக்கும் வீட்டில் சில தீயசக்திகளின் நடமாட்டமும் நிகழ்கிறது. இதனால் திகிழடைந்த ஆரி, தனது முன்னால் காதலியை தேட துப்பறிகிறார். அவரின் காதலி கிடைத்தாரா? அவரின் காதலிக்கும் அவர் குடியிருக்கும் வீட்டுக்கும் என்ன தொடர்பு? என்பதை திகிலூட்டும் விதமாக பல மர்மங்கள் நிறைந்ததாக படமாக்கியிறுக்கிறார் இயக்குநர் எள்.ஆர்.சுந்தர பாண்டியன். படத்தின் ஒவ்வொரு காட்சியும் திகிலால் நிறைந்திருக்கிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்துவரும் இயக்குநரை கைத்தட்டி வரவேற்கலாம். ஆரி அர்ஜூனன் துப்பறியும் காட்சிகளில் அவரின் இரு விழிகளும் புருவத்தின் நெருடலும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. உணர்சிகளுக்கு தனி உருவம் கொடுத்து நடித்திருக்கிறார் ஆரி அர்ஜூன். நாயகிகளான தீப்ஷிகாவும் பவித்ராவும் தராசின் இருதட்டுகளும் சமநிலையிலிருக்கும் விதத்தில் தங்களது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறர்கள். அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தையும், இரவின் ஈரப்பத விழிகளில் தீப்பொறி பறக்க செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் லட்சுமணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மனிதர் கேமிராவின் கண்களோடு விளையாடியிருக்கிறார். திகிலுக்கு துணைபோயிருக்கிறார் இசையமைப்பாளர் தருண்குமார். அமானுஷிய சக்திகளுக்கு வில்லன கதாபாத்திரம் ஈடுகொடுக்க முடியவில்லை. இருந்தாலும் நடித்திருக்கிறார் வில்லன் சுப்பிரமணியம் சிவா.
“4த் ஃபுளோர்” திரைப்பட விமர்சனம்
