‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்ற 45 நாள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. போட்டிகள் ஏராளமாக உள்ள உடற்பயிற்சிக்கான ஃபிட்னஸ் உலகத்தை பின்னினியாகக் கொண்ட இப்படம்- பல உணர்வுகளின் கலவையாக அமைந்துள்ளது. காதல்- குடும்பம்- எதிர்பார்ப்புகள்- தனிப்பட்ட லட்சியங்கள் -ஆகியவை மோதிக் கொள்ளும் வகையில் இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான போட்டிகள் நிறைந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘விக்கல்ஸ்’ விக்ரம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். அவருக்கு ஜோடியாக உடற்பயிற்சி மற்றும் பாடி பில்டிங் துறையில் நன்கு அறியப்பட்ட ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். கே. சி. குரு எழுதி, இயக்கும் இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாகரா சந்தேஷ் ( Sagara Sandesh) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவாளராக பிரமோத் கோட்டியன் – இசையமைப்பாளராக சரவணன் சுப்பிரமணியம் – படத்தொகுப்பாளராக ஹரிஷ் கொம்மே மற்றும் வசனகர்த்தாவாக ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ********
*தொழில்நுட்பக் குழு* *தயாரிப்பு* : ஹிதா ஸ்டூடியோஸ் (Hitha Studios) *கதை, திரைக்கதை மற்றும் இயக்கம்:* கே.சி. குரு *இணைத் தயாரிப்பாளர்* : சாகரா சந்தேஷ் *ஒளிப்பதிவு* : பிரமோத் கொட்டியன். இசை* : சர்வனா சுப்பிரமணியம். படத்தொகுப்பு* : ஹரிஷ் கொம்மே வசனம்* : விக்கல்ஸ் விக்ரம் இணை இயக்குநர்* : கிரண் தும்பகெரே. நிர்வாகத் தயாரிப்பாளர்* : ஷரத் குமார். கலை இயக்குநர்* : சங்கரகௌடா. உதவி இயக்குநர்கள்* : அகமது வரதராஜன், பிரேம் சந்திரன். *மக்கள் தொடர்பு* (PRO): நவநீத கிருஷ்ணன்

