தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை அழித்தொழிக்கும் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசினை கண்டித்து பிப்-12-ல்அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அறைகூவல் படி நாடுதழுவிய வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னை கிண்டி தபால்நிலையம் முற்றுகை போராட்ட மறியல் போராட்டத்தில் ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C ) தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M A.M L.அவர்கள் தலைமையில் ஐக்கிய மகிளா சங்கத்தின் மாநில தலைவர் தோழர் கு.காமாட்சி . மின் துறை பணியாளர் சங்க தோழர்கள்,விவசாயிகள் மாநில துனைதலைவர் தோழர் இராணி, R.S.P யின் சென்னை பெருநகர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் கருப்பையா, U.T.U.C-யின் மாநில குழு துனைத்தலைவர் தோழர் கோமள தேவி , மற்றும் 27பெண் தோழர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழ்த்துக்கள் தோழர்களே !தங்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சென்னை பெருநகர் மாவட்டக்குழு. க.தனபால் சென்னை பெருநகர மாவட்ட செயலாளர் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி.(R.S.P).

