“ஹேப்பி ராஜ்” திரைப்பட விமர்சனம்

பியாண்ட் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ், கெளரி ப்ரியா, அபாஸ், ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், மதுரை முத்து ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹேப்பி ராஜா”. கோயம்புத்தூர் அருகேயுள்ள ஒரு அழகிய கிராமத்தில் ஆரம்ப பாடசாலை ஆசிரியராக வேலை பார்க்கிறார் ஜார்ச் மரியான். இவரின் உருவத் தோற்றம் அழகில்லாமல் இருப்பதால் அக்கிராம மக்களால் “குதிரை முட்டை வாத்தியார்’ என்று கேலி செய்யப்படுகிறார். இவருக்கு மகனாக அழகான தோற்றத்தில் பிறந்தவர்தான் ஜி.வி.பிரகாஷ். தகவல் தொழில் நுட்பத்துறை  பொறியாளரான இவர், பெங்லளூரில் உள்ள ஒரு குழுமத்தில் வேலைக்கு செல்கிறார். அங்கு அக்குழுமத்தின் உச்சபட்ச அதிகாரியாக இருக்கும் கௌரி பிரியா, ஜி.வி.பிரகாஷை காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். கௌரி பிரியா அழகான உருவத்தோற்றத்திலிருக்கும் அப்பாஸின் மகள் ஆவார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றதும் ஒரு சிறிய காரணத்துக்காக நிச்சயதார்த்தம் நின்று போய்விடுகிறது. எதற்காக நிச்சயதார்த்தம் நின்றுபோனது? என்பதுதான் கதை. பெண் வீட்டாரால் தன் தந்தை ஜார்ஜ் மரியான்  அவமானப்படும்போது அதைப் பார்த்து துடிக்கும் ஒருமகனின் ரத்தக் கொதிப்பை ஜி.வி.பிரகாஷ் தத்ரூபமாக கொட்டித்தீர்க்கிறார். தனலில் நிற்பதுபோல் அவர் கொந்தளிக்கும் காட்சி உணர்வுப்பூர்வமானது. உச்சக்கட்டக் காட்சியில் ஜார்ஜ் மரியானின் நடிப்பு கண்கலங்க வைக்கிறது. மகன் மீது தந்தை வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்க்தும் காட்சி அருமை. அதே உச்சக்கட்டகாட்சியில் ஜி.வி.பிரகாஷ் தந்தை தன் மீது வைத்திருக்கும் பாசத்க்தை நினைத்து நினைத்து கண்ணீர் சிந்தும் கட்டமும்படம்பார்ப்பவர்களின் கண்கள் நனைகின்றன. ஏழை ஆசிரியராக இருந்த ஜார்ஜ் மரியான் திடீரென்று கோடீஸ்வரனாக இயக்குநர் காட்டியிருப்பது அளவுகடந்த சினிமாத்தனம். தந்தை  எப்படி இருக்க வேண்டும். மகன் எப்படி இருக்க வேண்டும் எனதை மனதை வருடும் வகையில் அழகாக படம்பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன். வீட்டில் எலியும் பூனையுமாக இருக்கும் தந்தையும் மகனும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய படம் “ஹேப்பி ராஜ்”.