“ரூம் பாய்” திரைப்பட விமர்சனம்

சூர்யகலா சந்திரமூர்த்தி தயாரிப்பில், ஜெகன்ராயன் இயக்கத்தில், சி.நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து  கருப்பு, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரூம் பாய்”.  ஏலகிரி மலையிலுள்ள ஒரு சொகுசு விடுத்தியில் வேலை பார்க்கும் இளஞர்களை அவ்விடுதியின் நிர்வாகம் கொத்தடிமைகளாக பிடித்துவைத்து வேலை வாங்குகிறது. வேலை செய்யத் தெரியாத ஊழியர்களை அடித்து கொலையும் செய்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல்  அவ்விடுதிக்கு தங்க வரும் பெரும் பணக்காரகளையும் உயர் அதிகாரிகளையும் அவர்கள் தங்கும் அறைக்குள் ரகசிய ஒளிப்பதிவு பொறியை பொறுத்தி அவர்களின் லீலைகளையும. ஆந்தரங்க ரகசியங்களையும் பதிவு செய்து அதை அவர்களுக்கு காண்பித்து பணம் பறிக்கிறார்கள். இவ்விடுதிக்கு உல்லாசப் பயணிகளாக வரும் காதலர்களை முகமூடி அணிந்த ஒரு மர்ம மனிதன், காதலனை கொன்றுவிட்டு காதலியை கற்பழித்துவிட்டு கொலை செய்கிறான். இதற்கிடையில் தனது தந்தயை காணவில்லை என்று ஏலகிரி காவல் நிலையத்தில் கவிதா புகார் அளிக்கிறார். அந்த புகாரின் பேரில் காவல்த்துறையினர் விசாரணை  செய்து வருகிறார்கள். இவ்வாறு இருக்க  இந்த விடுதிக்கு சென்னையிலிருந்து நிகலும் அவரது நண்பர் காத்து கருப்பும் ஏலகிரிக்கு வருகிறார்கள். அவ்விருவரும் அந்த சொகுசு விடுதியில் அறை பையன்களாக வேலைக்கு சேருகிறார்கள். இவர்களும் பயணிகளை சரியாக கவனிக்காததால் விடுதி மேலாளரிடம் அடி உதை வாங்குகிறார்கள். சில நாட்கள் கழித்து அவ்விடுதிக்கு குடும்பத்தினருடன் வரும் உல்லாசப் பயணியான ஹர்ஷாவும் நிகலும் காதலிக்கிறார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் அந்த  விடுதிக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம மனிதன் மேலாளரை கொலை செய்த்குவிட்டு சில ரகசிய கோப்புகளை திருடிக் கொண்டு போய்விடுகிறான். அந்த மர்ம மனிதன் யார்?. காணாமல்போன கவிதாவின் தந்தை யார்? கண்டுபிடிக்கப்பட்டாரா? இல்லையா?. நிகில் அந்த் விடுதிக்கு வேலைக்கு சேர்ந்த காரணம் என்ன? போன்ற மர்ம முடிச்சுகள் நிறைந்த படம்தான் “ரூம் பாய்”. இக்கதையின் கரு பலபடங்களில் உருவாகியதுதான். ஆனால் ஒரு புதிய கோணத்த்கில் இயக்குநர் இதை படமாக்கியிருக்கிறார். நிகில் இப்படத்த்ன் மூலம் அறிமுக கதாநாயகனானாலும் பல படங்களில் நடித்த்கிருக்கும் அனுபவ நடிகராக திகழ்கிறார். மேலாளரிடம் அடி வாங்கும் காட்சியிலும், ஹர்ஷாவை காதலிக்கும் உடல் மொழியிலும் ஜொலில்க்கிறார். கதாபாத்திரத்துக்கேற்ற பரிமாணங்களை இலகுவாக கையாளுகிறார். ஹர்ஷா இளமை ததும்ப காணப்படுகிறார். இவ்விருவரும் தமிழ் திரைவானில் சிறகடித்து பறக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளது. இமான் அண்ணாச்சிக்கு வாய்ப்புகள் அதிகம் க்க்டுக்கவில்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்புடன் செய்து முடித்துள்ளார். துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இமான் அண்ணாச்சிக்கு நகைச்சுவை அதிகமில்லை. ஏலகிரியின் அழகை திரையில் காவியமாக படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாரதி ராஜன். பின்னணி இசையும் பார்வையாளருக்கு  சலிப்புத்தட்டாமல் பார்த்துக் கொள்கிறது. ஒரு முழுநீள துப்பறியும் நாவலை படித்த அனுபவம் இத்திரைப் படம் பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளது.