“சண்டக்காரி” திரைப்பட விமர்சனம்

புன்னகை பூ கீதா தயாரிப்பில் மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா சரண், புன்னகை பூ கீதா, பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்தியன், தேவ் கில், உமா பத்மநாபன், க்ரேம் மனோகர், மகாநதி சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சண்டக்காரி”. லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு தலைமை அதிகாரியாக இருக்கிறார் ஸ்ரேயா சரண். மிகவும் கோபக்காரி, தனக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களை திட்டி தீர்த்துவிடுவார். பொல்லாதவள். அவரிடம் வேலை செய்ய முடியாமல் பலபேர் வேலையை விட்டு ஓடிவிடுகிறார்கள். மதுரையிலிருந்து லண்டனுக்கு போய்  ஸ்ரேயாவிடம் விமல் வேலைக்கு சேர்கிறார். ஸ்ரேயாவின் ஏச்சிக்கும் பேச்சிக்கும் விமல் ஈடுகொடுத்து எப்படி ஸ்ரேயாவை தன் வழிக்கு கொண்டுவந்தார் என்பதுத்கான் கதை.

விமல் வழக்கமான தனது இயல்பான, ஜாலியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறார். குறிப்பாக அப்பாவியாக நடிக்கும்  காட்சிகளில் விமலின் உடல்மொழி ரசிக்க வைக்கின்றன. படத்தின் உண்மையான கவன ஈர்ப்பு நடிகை ஸ்ரேயா. மாயா என்ற கதாபாத்திரத்தில் ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் நடித்து, தனது அனுபவத்தை வெளிப்படுத்துகிறார். ஹீரோவைக் காட்டிலும் படத்தின் முக்கியமான கதாபாத்திரமாக ஸ்ரேயா இருப்பதால், ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். லண்டன் பொழுதுபோக்கு கிளப்பிலும், கிராமத்தில் லுங்கி கட்டிக் கொண்டு விமலுடன் ஆடும் குத்துப்பாட்டுக்கு ஆடும் ஆட்டத்திலும் பார்வையாளர்களை குதூகலம் அடைய வைத்துவிட்டார் ஸ்ரேயா. பிரபு, கே.ஆர். விஜயா, உமா பத்மநாபன், தேவ் கில் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போய்விட்டார்கள். அம்ரிஷின் இசை பார்வையாளர்களை தாளம் போட வைக்கிறது. லண்டன் நகரத்து அழகையும்,  மதுரை மண்ணின் செழிப்பையும் தத்ரூபமாக படம்பித்துள்ள ஒளிப்பதிவாளர் பாராட்டுத்கலுக்குறியவர். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை கலகலப்பாக இயக்குயிருக்கும் மாதேஷ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.