உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக திருவல்லிக்கேணி சரக காவலர்களின் கொடி அணிவகுப்பு

சென்னை பெருநகர காவல். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு அச்சமின்றி வாக்களிப்பதற்காக நம்பிக்கையூட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களுடைய உத்தரவின்படி திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் திரு பகலவன் ஐபிஎஸ் அவர்களுடைய வழிகாட்டுதலுடன் திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையர் திரு எம் எஸ் பாஸ்கர் அண்ணா சதுக்கம் அண்ணா சாலை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவல்ஆளினர்கள் பெண் காவலர்கள் உட்பட ஏராளமானோர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இன்று 16 .2. 20 2022 மாலை 04.00 மணிக்கு அண்ணா சதுக்கம் காவல் நிலைய சரகம் மாட்டான் குப்பம் வி ஆர் பிள்ளை தெரு பெல்ஸ் சாலை பாரதி சாலை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை எல்லீஸ் ரோடு ஜாம்பஜார் மார்க்கெட் பிள்ளையார்கோவில்தெரு பார்டர்தோட்டம் ஜிபி ரோடு எஸ் எம் நகர் ஆகிய பகுதிகளில் நடந்து அணிவகுப்பு நடத்தியும் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் அணிவகுப்பாக சென்று மக்களுக்கு அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை மூட்டும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி உற்சாகப்படுத்தினர்.