சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, (வயது 31)என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார். கடந்தவாரம் அமித்பாஷா அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமித்பாஷா நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு சென்று பேசிக்கொண்டிருந்த போது, ஷேக் அப்துல்லா, அமித் பாஷாவிடம் ஏன் எனது மனைவியை பற்றி தவறாக பேசினாய் என கேட்ட போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஷேக்அப்துல்லா மேற்படி அமித்பாஷாவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த காயமடைந்த அமித்பாஷாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அமித்பாஷா வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அமித்பாஷாவின் தந்தை காசிம், வ/57, என்பவர் இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, கொலை வழக்கில் தொடர்புடைய எதிரி ஷேக்அப்துல்லா, வ/31, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் எதிரி ஷேக்அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள்.
நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது.
