சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.07.2025ம் தேதி ஓய்வு பெறற 24 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவு கூர்ந்து, சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.காவல் ஆணையாளர் ஓய்வு பெறுகின்ற காவல் குடும்பத்தினரிடம், காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்தும், பணி ஓய்வு பெறுகின்ற காவல் அதிகாரிகள், அலுவலர்கள் தங்களது உடல் நலத்தையும், குடும்பத்தையும் பேணி காக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்
(தலைமையிடம்),விஜயேந்திர பிதாரி,துணை ஆணையாளர்கள் ஹரிகிரண் பிரசாத், (நலன் மற்றும் எஸ்டேட்),.சுப்புலட்சுமி,(நிர்வாகம்)அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெறுகின்ற காவல் அலுவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
