“கள்ளன்” திரைப்பட விமர்சனம்

கரு.பழனியப்பன் காடுகளில் மிருகங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தும் தொழில் செய்து வருகிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சென்று காட்டுப் பன்றிகளை வேட்டையாடுகிறார். மிருகங்களை வேட்டையாடும் துப்பாக்கியும் செய்யத் தெரிந்தவர். ஒரு கட்டத்தில்வனவிலங்குகளை வேட்டையாடினால் கைது செய்து விடுவதாக வனக்காவலர்கள் கரு.பழனியப்பனையும்அவரது நண்பர்களையும் எச்சரிக்கிறார்கள். அதனால் வேட்டையாடும் தொழிலை விட்டுவிடுகிறார்கள். கையில் காசு இல்லை. தேத்தண்ணி குடிக்கக் கூட கையில் காசு இல்லாமல் கஸ்டப்படுகிற சமயத்தில், துப்பாக்கி செய்து விற்றால் கஸ்டமில்லாமல் வாழலாம் என்று மனிதனை சுடும் துப்பாக்கி செய்கிறார். அதனால் கைதாகி சிறைக்கு சென்று பின் விடுதலையாகி வீட்டுக்கு வருகிறார். பிறகு வழிப்பறி கொள்ளை, வீடு புகுந்து கொள்ளையடிக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்த பணத்தை தனதாக்கிக்கொள்ள ஒருவருக்கொருவர் கொலை செய்து மடிகிறார்கள். இதுதான் கடைசி வரைக்கும் கதை சென்றுமுடியும் தருவாயில் கரு.பழனியப்பன் அவரது காதலி நிவேதாவின் நிலை என்ன என்பதை திரையில்கேட்டுவிட்டு வெளியே வந்துவிடலாம்.

கரு.பழனியப்பன் மேடைப் பேச்சாளராகவே துண்டுதுண்டான வசனம் பேசுகிறாரே தவிர உடலசைவுஒன்றுமில்லை. ஓடுவதிலும் சண்டை போடுவதிலும் மட்டுமே நடிக்கிறார். துக்கத்தையும் மகிழ்ச்சியையும்முகத்தில் காட்டும் விதத்தை என்னவென்று சொல்ல…….நடிப்பதற்கு வாய் மொழியை உடல் மொழி ஆட்சி செய்ய வேண்டும். அதை கரு.பழனியப்பன் பழகிக்கொள்ள வேண்டும்.

கதாநாயகி நிகேதா வில்லி மாயா இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருகின்றார்கள்.  

நமோ நாராயணன் நகைச்சுவையாளராகவும் குணச்சித்திரதிலும் உச்சக்கட்ட காட்சியில்வில்லத்தனத்திலும், வெளுத்து வாங்கியிருக்கிறார். உயிர் பிரியும் பாவனையை முகத்தில் காட்டியதுநடிப்பின் உச்சத்தை தொட்டுவிட்டார்.

ஒருநாளில் பெய்த மழை நீரில் சிறையிலிருந்து தப்பிக்கும் காட்சி எதார்த்தமில்லாத சினிமாத்தனம்மிகுந்த காட்சியமைப்பு.

மொத்தத்தில் “காசேதான் கடவுளடா” படத்தின் கருவை திருடிவிட்டான் “கள்ளன்”