தாம்பரம் 26 வார்டில் தார் சாலைக்கு பூமி பூஜை

இன்று (17.03.2022) காலை தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு உட்பட வேலாயுதம் தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை பணிகளை 26வது வட்ட செயலாளர் இ. ஜோசப் அண்ணாதுரை MC தலைமையில் 26வது மாமன்ற உறுப்பினர் புஸ்ராபானு நாசர் MC முன்னிலையில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ. கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். உடன் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.