“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

*தமிநாடுஈரோட்டில் கனடா உதயன  லோகேந்திர லிங்கம்*

(ஈரோட்டிலிருந்து மலேசியா நக்கீரன்)

இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்குபுலம்பெயர்ந்து, பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்துகனடாவிற்கேயுரிய பல இனபல கலாச்சாரபன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்சமூககலைத் தளங்களில்நன்கு அறியப்பட்ட ஆளுமையாக இப்போது திகழ்பவர் கனடா உதயனின் பிரதம ஆசிரியர் திரு.நாகமணிலோகேந்திரலிங்கம்.

இப்படிப்பட்டவர், ஈரோட்டில் நடைபெற்றுவரும் 19-ஆவது புத்தகக் கண்காட்சியின் 7-ஆவது நாளின்உரையரங்கத்தின் நாயகராக விளங்கினார். அவருக்கு உற்சாகமானவரவேற்பு அங்கு அளிக்கப்பெற்றது

தமிழக அரசின் ஆதரவுடன் ஈரோட்டைத் தளமாகக் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவையின் முன்னெடுப்பில்இந்தப் புத்தகத் திருவிழா நடைபெற்றாலும் இதன் அச்சாணியாகத் திகழ்பவர் . ஸ்டாலின் குணசேகரன்.

அவரின் அறிமுக உரைக்குப்பின், சிறப்புரை நிகழ்த்திய திரு.லோகேந்திரலிங்கம், முதன்முதலாக கவிஞர்வைரமுத்து உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளை ஆண்டுதோறும் வரவழைத்து கனடவாழ் புலம்பெயர்தமிழரிடையே உரைநிகழ்த்த வைக்கும் விதத்தை ஈரோட்டு புத்தகப் பெருவிழா கூட்ட அரங்கில்எடுத்துரைத்தார்.தமிழ்நாட்டிலிருந்தும் ஈழத்திலிருந்தும் தான் அழைத்து கௌரவித்த கலை இலக்கியஆளுமைகளிடமிருந்து தாம் பல அறிவு சார்ந்த விடயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் தமிழகத்தை ஈழத்துமக்கள் தங்கள் தாய்த் தமிழகம் என்று அழைக்கின்றார்கள். மேலும் நம்பிக்கைகளோடு உள்ளார்கள் என்றும்உற்சாகத்தோடு தெரிவித்தார். அத்துடன் தான் சந்தித்த கலை இலக்கிய வழிகாட்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டவற்றைக்கொண்டு தனது பத்திரிகைத்துறை மற்றும் இலக்கியத் தளம் ஆகியவற்றில் தன்னைதக்கவைக்கும் வகையில் உதவுகின்றன என்றும் கடுமையான வாசிப்பு தான் தம் போன்றவர்களை காப்பாற்றும்என்றும் அந்த வகையில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்து கொள்வதாகவும்தெரிவித்தார்.

முதல் நாள் பெய்த கனமழையால் மணற்பரப்பு புழுதிபரவாமல் இருந்தாலும் வானம் சன்னமாக உதிர்த்தநீர்த்திவலைகளைக் கண்டு, எங்கே இன்றும் மழைவந்து விடுமோ என்ற பதற்றம் எழுந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அளவுடன் பேசிமுடித்த இதழாசிரியர் லோகேந்திரலிங்கம் உரை, அரங்கில் திரண்டுஇருந்தவர்களுக்கு புதுமையாக இருந்தது.

தமிழர் தாயகமான ஈழத்தையும் கனடாவையும் தமிழ்வழி இணைத்த அண்ணன் லோகேந்திரலிங்கம், கனடாவில்உதயன் உதயமானது முதல் இன்று கதிர்பரப்பி நிற்கும் சூழல்வரை எடுத்தியம்பினார்.

அன்றைய தினம் லோகேந்திரலிங்கம் அவர்களோடு மேடையை அலங்கரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தஇசைக்கவி ரமணன்அவர்களும் இசையோடு தனது உரையை வழங்கி சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றார்.