உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழங்கும் விழாவில் ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

இன்று மார்ச் மாதம் 11ம் திகதி சென்னை மாநகரில் உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பினர் நடத்திய வருடாந்த விருது வழஙகும் விழாவில் சாதனைப் பெண்மணிகள் மற்றும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்கள் சிலர் ஆகியோர்க்கு கௌரவ விருதுகள் வழங்கப்பெற்றன. இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் விருது பெற்றவர்களுக்கு பட்டி மன்றப் பேச்சாளர் லியோனி மற்றும் விஐரி பல்கலைக் கழக வெந்தர் விசுவுநாதன் அவர்கள் மற்றும் உலகத் தமிழ் வம்சாவழி அமைப்பின் நிறுவனர் செல்வகுமார் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.

 இங்கு காண்ப்படும் படங்களில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம், இலங்கை தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் அவர்கள் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விண்வெளிப் பயணம் செய்யவுள்ள முதற் தமிழ்ப் பெண் உதயகீர்த்திகா ஆகியோர் கௌரவிக்கப்படுவதைக் காணலாம்.

செய்தியும் படங்சுளும் சங்சர் மற்றும் பிரகாஸ்