நடிகர் ஷர்வா, இயக்குநர் சம்பத் நந்தி, கே. கே. ராதா மோகன் – ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் – கூட்டணியில் தயாராகும் இந்திய திரைப்படமான ‘போகி’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. பதாகையில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் இந்த பதாகை கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது. இந்தத் தோற்றம் எதுவும் மெருகூட்டப்படவில்லை… எதுவும் கட்டுப்படுத்தப்படவில்லை.. என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்கிறார்கள். மேலும் பல பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.*******
தொழில்நுட்பக் குழு : எழுத்து & இயக்கம் : சம்பத் நந்தி தயாரிப்பாளர்: கே. கே. ராதாமோகன் தயாரிப்பு நிறுவனம்: ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் வழங்குபவர்கள் : லட்சுமி ராதா மோகன் இசை : பீம்ஸ் செசிரோலியோ ஒளிப்பதிவு : கிஷோர் குமார் ஆரோக்யா கலை இயக்குநர் : கிரண்குமார் மன்னே சண்டை பயிற்சி : திலீப் சுப்பராயன் மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா)

