“சீதாராம்” திரைப்பட விமர்சனம்

தேவிபிரசாத் ஷெட்டி  மற்றும் சாத்விக் ஹெப்பார் தயாரிப்பில் தேவிபிரசாத் ஷெட்டி இயக்கத்தில் விஜய ராகவேந்திரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “சீதாராம்”. விஜய ராகவேந்திரா கர்நாடகாவில்  ஆனகோட்டம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக  பணியாற்றி வருகிறார். இவரது எல்லையில் கொடூரமான கொலைகள் தொடர்ந்து நடக்கிறது.  விஜய் ராகவேந்திரா தன்னால் முடிந்த அளவுக்கான விசாரணையை முடுக்கிவிட்டு கொலையாளியை தேடும்பணியில் ஈடுபடுகிறார். கடைசியாக அவர் கொலைகாரனை கண்டு பிடித்தாரா? இல்லையா? யார் அந்தக் குற்றவாளி?  எதற்காக இந்தக் கொலைகள்? என்பதுதான் கதை. விறுவிறுப்பான திரைக்கதையை ஒரு நாவல்போல் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் தேவி பிரசாத் செட்டி. ஒவ்வொரு சாட்சியத்தின்போதும் தன்னுடைய உடல் மொழியாலேயே தன்னுடைய நடிப்பினை காண்பித்திருக்கிறார்  விஜய ராகவேந்திரா. இதில் நடித்த அனைவரும் திரக்கதையில் கதாபாதிரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கொலையாளியின் பின்புலம் நம் மனதை கலங்கச் செய்திருக்கிறது.  ஒரு சிறுவன் எதிர்காலத்தில் எப்படி ஒரு சைக்கோவாக மாறுவான் என்பதை இந்தப் படத்தில் கோடிட்டு காட்டி இருக்கிறார் இயக்குநர். அந்த சிறுவனும் அவன் வளர்ந்து இப்போது இளைஞனாக இருக்கும்போது காட்டுகின்ற அந்த வெறித்தனம் நிச்சயம் நம்மை பயமுறுத்துகிறது. அதே சமயம் இது போன்ற கதைகளில் சிறுபிள்ளைதானே என்று நாம் விட்டுவிடக்கூடாது.அவர்களின் மனதை சாந்தப்படுத்த வேண்டும் என்கின்ற ஒரு சிறிய அறிவுரையை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளரும் தங்களுடைய பங்கை செய்த பின்பு படத் தொகுப்பாளர் தானும் ஒரு மிகப் பெரிய உதவியை இயக்குநருக்கு செய்திருக்கிறார்.  இந்தப் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்வதுபோல நமக்குத் தோன்றினாலும் ஒவ்வொரு காட்சியும் அடுத்தடுத்து வேறு, வேறு தளங்களுக்கு நகர்ந்து செல்வதால், முழு படத்தையும் நம்மால் ரசித்து பார்க்க முடிந்திருக்கிறது.  இதற்கெல்லாமா கொலை செய்வார்கள் என்று நாம் நினைத்து சாதாரணமாக கேட்டுவிட்டு போய்விடக் கூடாது என்கின்ற அளவுக்கு இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.அவருடைய திறமைக்கு நமது மிகப் பெரிய பாராட்டுக்கள்!