‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் காணொளி வெளியானது

மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், டி ச்டுடியொஸ், சன்னி டென்வி தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் காணொளி  வெளியிடப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும்  இப்படத்தின் காணொளி, சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். *******