இராமநாதபுரம் மாவட்டம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ்மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள்விழாவினை சிறப்பிக்கும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால்குமாவத்,இ.ஆ.ப.,கொடியசைத்து துவக்கி வைத்து  தெரிவிக்கையில்:

தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளைசிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ-மாணவிகள  அறிந்துகொள்ளும்  வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசுபேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில்01-நவம்பர்-2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால்சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. இந்தநகரும் புகைப்படக்கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்உள்ள பள்ளிகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளுக்குநேரடியாக சென்று ஏராளமான மாணவ-மாணவியர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது. இந்தபேருந்தானது இன்று 30.04.2022 நமத மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது. திருவாடாணை வட்டம், புனித பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவ-மாணவிகள் பார்வையிடும் வகையில் இந்தபுகைப்படக் கண்காட்சியானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது வருகின்ற06.05.2022 வரை நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவ-மாணவிகள்கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த பேருந்தானது இன்று (30.04.2022) திருவாடாணை வட்டம், சி.கே.மங்கலம் புனிதபிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி, திருவாடாணை  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  திருவாடாணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தொண்டி  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , தொண்டி  அரசுபெண்கள் மேல்நிலைப் பள்ளி, உப்பூர்  அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாலைக்குடி அரசுமேல்நிலைப் பள்ளி, வெட்டுகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம்  அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.மங்கலம்  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோழந்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், (02.05.2022) அன்று தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தார்கோட்டை முகமதிய அரசு மேல்நிலைப்பள்ளி,  அத்தியூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, உச்சிப்புளி அரசுமேல்நிலைப்பள்ளி, இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி, மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பன்அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும்,  (04.05.2022)அன்று இராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேர்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, இராமேஸ்வரம் சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தனுஷ்கோடிஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, இராமேஸ்வரம் எஸ்.பி.ஏ பெண்கள் மேல்நிலைப்பள்ளி,  தங்கச்சிமடம் ஹோலி கிராஸ்  பள்ளி, கடுக்கை வலசை அரசு மேல்நிலைப்பள்ளி, புதுமடம் அரசுமேல்நிலைப்பள்ளி, தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டையூரணி அரசுமேல்நிலைப்பள்ளி, கும்பரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துபேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பெரியபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி, வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புல்லாணிஅரசு மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் எம்.பி.எல் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், (05.05.2022)அன்று இராமநாதபுரம் டி.டி.வி மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் செய்யது அம்மாள்மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் இராஜதினகர் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் ராஜாஸ்மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் செயின்ட்ஆண்ட்ரூஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம்குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி,  சக்கரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கரைஹமீடியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரை ஹமீடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழக்கரைஹைரதுல் ஜலலியா மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கல் அரசுமேல்நிலைப்பள்ளி, மேலசெல்வனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கடுகுசந்தை அரசு மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவிலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்கபடை ஆதிதிராவிடர் நலன் மேல்நிலைப்பள்ளி, கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும், (06.05.2022)அன்று முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விளங்குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாம்பூர்அரசு மேல்நிலைப்பள்ளி, திருவரகம் ஸ்கேர்ட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, அழகனூர் அரசுமேல்நிலைப்பள்ளி, செல்லூர்,பரமக்குடி  சௌராஸ்டிரா மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி கேஜேஇஎம்மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஏ.வி மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆர்.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்டுபரமக்குடி ஆதிதிராவிடர் நலன்மேல்நிலைப்பள்ளி, கமுதகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியபள்ளிகளுக்கு சென்று மாணவ-மாணவிகள் கண்டு களிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து , திருவாடாணைவட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் மற்றும்  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.