தன்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் சிவகுமார்

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை கதாநாயகனாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.  புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 வயதாகிறது. சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார்.  சூலூர் கலை பித்தனும் 1983 மற்றும் 1986-ஆம் வருடங்களில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்கள் எடுத்தவர் .
அவர் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டிணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள TVS 100 வாங்கி பரிசளித்தார் நடிகர் சிவகுமார்.