சட்டம் தூங்குகினற நேரம் பார்த்துதான் நிரபராதிகள் வெளியே வரமுடிகிறது “ப்ரீடம்” திரைப்பட விமர்சனம்

பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லியோ மோல் ஜோஸ், மு.ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஸ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ்கண்ணா, மணிகண்டன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “ப்ரீடம்”. 1991 ஆம் ஆண்டில் சசிகுமார் இலங்கை அகதியாக கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார். அவர் வருவதற்கு முன்பாகவே கர்ப்பிணியாக இருக்கும் லியோ மோல் ஜோஸ் அகதியாக ராமேஸ்வரம் முகாமில் இருக்கிறார். இருவரும் பாசப்பினைப்பில் கண்கலங்கி ஆனந்தமட்சிகிறார்கள். இரு நாட்கள் கழித்து ஶ்ரீபெரம்புத்தூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியை இலங்கைப் போராளிகள் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்கிறார்கள். இந்த படுகொலை செய்தவர்களை கண்டுபிடிக்க ராமேஸ்வரம் அகதிகள் முகாமிலிருக்கும் சசிகுமார், மு. ராமசாமி, மணிகண்டன் உள்பட சில பேர்களை விசாரணை கைதியாக சிறைபிடித்து வேலூர் கோட்டையில் அடைத்து விசாரணை என்ற பெயரில் அடித்து உதைத்து கொடுமை செய்கிறார்கள். விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களை இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக அழைத்துச் சென்ற இலங்கை அகதிகளை 4 ஆண்டுகளாகியும் அனுப்பாமல் கோட்டைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார்கள். போராட்டம் நடத்தியும் சட்டரீதியாகவும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. பிறகு அந்த விசாரணைக் கைதிகள் என்ன ஆனார்கள்? தப்பித்து வெளியே வந்தார்களா? இல்லையா? என்பதுதான் தமிழர்களின் இதயத்தை கனக்கவைத்த கதை. இப்போதெல்லாம் சசிகுமார் இலங்கைத்தமிழில் பேச நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார். அகதிகளின் முகத்தோற்றத்தையும் கொந்தளிக்கும் மன உலைச்சலையும் திரையில் அணுகு மிசாகாமல் அப்படியே காட்டி நடித்துள்ளார். இனி இவர் வெளிநாட்டுக்கு சென்றால் இலங்கை அகதி வந்திருக்கிறார் என்று விமான நிலைய அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் நிறுத்தி விடுவார்கள் போலிருக்கிறது. (உசாராக வெளிநாட்டுக்கு செல்லுங்கள் சசிகுமார்). தமிழக திரையுலகில் நம்பியாருக்கு அடுத்தபடியாக வில்லனாக வரும் வாய்ப்பு சுதேவ் நாயருக்கு அதிகம் உள்ளது. கணவனுக்காக போராடும் குடும்ப்த்தலைவிக்கேற்ற உடல் வாகுவும் முகத்தெளிவும் லியோ மோல் ஜோஸ்வுக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. கணவன் சசிகுமாரை கண்டதும் கதிரவன் ஒளிபட்ட தாமரை மலர்வதைப்போல், லியோ மோல் ஜோஸின் முகம் மலர்ந்து ஆனந்த கண்ணீர்விடும் காட்சி பார்வையாளர்களின் மனைத கவ்விப்பிடிக்கிறது. தத்ரூமமான நடிப்பை தந்திருக்கிறார் லியோ மோல் ஜோஸ். வழக்கறிஞராக வரும் மாளவிகாவின் முகத்திற்கு அரிதரப்பூச்சு கொஞ்சம் அதிகம்தான். உச்சக்கட்ட காட்சியில் அவரின் செயல் கைத்தட்ட வைக்கிறது. (சட்டம் தூங்குகின்ற நேரம் பார்த்துதான் நிரபராதிகள் வெளியே வரமுடிகிறது). இலங்கை அகதிகளுக்கு நடந்த ஒரு துயரச் சம்பவத்தை யாருக்கும் அஞ்சாமல் துணிந்து சொல்லியிருக்கும் இயக்குநர் சத்ய சிவா பாராட்டுதலுக்குறியவர்.