ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயகத்தில் வனிதா விஜயகுமர், ராபர்ட், ஷகிலா, பவர் ஸ்டார் சினிவாசன், பாத்திமா பாபு, ஶ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, சவீதா பாரதி, சௌமியா ஜெயராமன், ஷர்மிளா, காயத்ரி ரேமா, கும்தாஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிஸ்சஸ் அண்ட் மிஸ்டர்”. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் வனிதாவும் ராபர்ட்டும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். வனிதாவுக்கு 40 வயதாகிறது ராபர்ட்டுக்கு 45 வயதாகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. “வாழ்ந்ததிற்கு அடையாளமே குழந்தைதான், அதனால் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்” என்று வனிதாவுக்கு அறிவுரை கூறுகிறார் பாத்திமா பாபு. அதனால் ஒரு குழந்தையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கணவர் ராபர்ட்டிம் கேட்கிறார் வனிதா. ஆனால் அதற்கு மறுக்கிறார் காணவர் ராபர்ட். வனிதா, குழந்தை பெற்றுக் கொண்டாரா? குழந்தை வேண்டாம் என்று ஏன் ராபர்ட் கூறுகிறார்? என்பதுதான் கதை. குழந்தை பெற்றுக்கொள்ள படுக்கையறை காட்சிகள் பகிரங்கமாகவும் சிற்றின்பச் சேட்டைகளும் உரையாடல்களும் திரைக்கதையை ஆக்கிரமித்துள்ளது. உச்சக்கட்ட காட்சியில் கணவன் மனைவிக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை வெளிப்படுத்திய காட்சிகளில் இயக்குநர் வனிதா வெற்றி பெற்றுள்ளார். அவரின் நிஜ வாழ்க்கையில் நடந்தேறிய சில உண்மைச் சம்பவங்களை நினைத்து கண்கலங்கி நடித்திருப்பதை திரையில் காணமுடிந்தது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்த்ரத்தின் தனமையை நன்றாக உணர்ந்து தங்களது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
“மிஸ்சஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்பட விமர்சனம்
