தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் – பூஜையுடன் ஆரம்பமானது

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில், தனுஷ் நடிக்கும்  புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.  விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை  இயக்குகிறார்.  இப்படத்தில்  தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.  ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்,  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.   ஸ்ரீஜித் சாரங்க் தொகுக்கிறார்.  இந்தியாவின் பல இடங்களில்,  தீவிரமான கதைக்களத்தில்,  படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக  வேல்ஸ் நிறுவனத்தின்   அர்ப்பணிப்பில், டி.54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம்  உருவாகிறது. இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.