“ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட விமர்சனம்

சுபாஷினி தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன், மால்வி மல்ஹத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷ செரின், சிவ, அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நாகலிடஸ் நிவேதிதா, யாசர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜென்ம நட்சத்திரம். அரசியல்வாதியாக இருக்கும் வேலராமமூர்த்தி வாக்காளர்களுக்கு கையூட்டுப் பணம் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணத்தை தனது வேலையாள் காளிவெங்கட்டிடம் கொடுத்திருக்கிறார். காளிவெங்காடின் மகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வத்ற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. அந்த பணத்தை தனது முதலாளி வேலராமமூர்த்தியிடம் கேட்கிறார். ஆனால் பணம் கொடுக்க அவர் மறுக்கிறார். அதானால் தன்னிடமிருக்கும் வேலராமமூர்த்தியின் பணத்திலிருந்து மகளின் மருத்துவ செலவுக்கு பணத்தை கையாடல் செய்கிறார் காளிவெங்கட். இதை கண்டுபிடித்த வேலராமமூர்த்தி காளிவெங்கட்டை கொலை செய்கிறார். மரணத்தருவாயிலிருக்கும் காளிவெங்கட் தனது நண்பர்களிடம் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் சொல்லி அதிலிருந்து தனது மகளின் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் படியும் கூறிவிட்டு இறந்து போய்விடுகிறார். காளிவெங்கட்டின் ஆசைபடி அவர்களது நண்பர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எடுத்தார்களாளா? அவரின் மகளுக்கு இதய் மாற்று அறுவை சிகிச்சை நிறைவேறியதா? மால்வியா மல்ஹோத்ராவுக்கும் பேய் மாளிகைக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். தமனும் ம்ல்ஹோத்ராவும் கதையின் கருவை தங்களது தோளில் சுமந்து நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பை அசால்ட்டாக செய்து முடித்ததோடு காளி வெங்கட், வேலராமமூர்த்தி, முனிஷ்காந்த ஆகியோர் திரைக்கதையோடு பயணித்திருக்கிறார்கள். பேய் படத்திற்கான இசையை பக்குவமாக அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம். அமானுஷிய காட்சிகளுக்கு அவர் அமைத்திருக்கும் இசை பார்வையாளர்களை அச்சுறுத்துகிறது. சாத்தானின் ஆளுமை எப்படியிருக்கும் என்ற தனது கற்பனைக்கு உயிர் மூச்சு கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிவர்மன். ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வருகிறது.