தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும்  திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ‘மிராய்’ படத்தில் மனோஜ் மஞ்சு ஒரு சக்தி வாய்ந்த வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண், ஜெயராம் , ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி ‘மிராய்’ படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன் நிபுணத்துவத்தை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதையை கார்த்திக் கட்டமனேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனங்களில் பங்களிப்பு செய்திருக்கிறார்.******

தொழில்நுட்பக் குழு* :இயக்குநர் : கார்த்திக் கட்டமனேனி தயாரிப்பாளர்கள் : டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் தயாரிப்பு நிறுவனம் : பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி  இசை : கௌரா ஹரி கலை இயக்குநர் : ஸ்ரீ நாகேந்திர தங்கலா எழுத்து : மணி பாபு கரணம் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா