“மகா அவதார் நரசிம்மா” திரைப்பட விமர்சனம்

ஹோம்லே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “மகா அவதார் நரசிம்மா”. இது ஒரு புராணக்கதை. இரணியகசிபு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து மரணமாகாத வரத்தை கேட்கிறான். அதற்கு “எதனால் தனக்கு மரணம் ஏற்படகூடாது என்று நீ நினைக்கிறாயோ அந்த வரத்தை கேள் தருகிறேன்” என்று பிரம்மதேவன் இரணியகசிபுவிடம் சொல்கிறார். அதற்கு “இரவிலும் பகலிலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மனிதனாலும் மிருகத்தாலும் ஆயுதங்களாலும் எனக்கு மரணம் ஏற்படக்கூடாது” என்று வரம் கேட்கிறான் இரணியகசியு. “அவ்வாறே கொடுத்தேன்” என்று பிரம்மதேவன் வரம் கொடுக்கிறார். இந்த வரத்தால் தனக்கு மரண்மில்லை என்ற மமதையில் பல அட்டூழியங்கள் செய்கிறான் அரக்ககுலத்து அரசன் இரணியகசிபு. ஆனால் இரணிய கசிபுவின் மகன் பிரகலாதன் விஷ்ணுவின் தீவிர பக்த்னாக வளர்கிறான். அதனால் மகனையே கொல்ல அரக்கர்களுக்கு ஆணையிடுகிறான் இரணியக்சிபு. ஆனால் அரக்கர்களால் பிரகலாதனை கொல்ல முடியவில்லை. முடிவில் மகா விஷ்ணு, இரவும் பகலும் இல்லாத மங்கிய மாலை நேரத்தில் மனித உடலும் சிங்கத்தலையுடனும் நரசிம்ம அவதாரத்துடன் தூணிலிருந்து வெளியாகி ரணியகசிபுவை தூக்கிக்கொண்டுவந்து வீட்டின் உள்ளேயும் வெளியேயுமில்லாமல் வாசல் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு தரையில் கிடத்தாமல் தன் மடியில் கிடத்தி ஆயுதமில்லாமல் கைவிரலின் நகத்தை கொண்டு இரண்யகசிபுவின் வயிற்றைக்கீறி பிழந்து குடலை வெளியே எடுத்து இரணியகசிபுவை கொல்கிறார் மகா விஷ்ணு. இதுதான் கதை. இப்புராணக்கதையை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.  சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள். பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகளுக்கான படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், புராண கதைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக உச்சக்கட்ட காட்சியில்  நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.