சிறந்த நடிகருக்கான விருதை சாந்தனு பாக்யராஜ் பெற்றார்.

கனடா இண்டர்நேஷனல் தமிழ்  பிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படமாக புளூ ஸ்டார் திரைப்படம் விருது பெற்றுள்ளது.  மேலும், சிறந்த நடிகராக இப்படத்தில் நடித்த சாந்தனு பாக்யராஜ்   விருதை பெற்றுள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ்,  லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2024 ம் ஆண்டு ஜனவரியில் தமிழில் வெளியானபோதே  மக்களின் வரவேற்பையும் விமர்சகர்களின் நன்மதிப்பையும்  பெற்ற இத்திரைப்படம், அண்மையில்  நடைபெற்ற கனடா இண்டர்நேஷனல் தமிழ் பிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.