“அந்த 7 நாட்கள்” திரைப்பட விமர்சனம்

முரளி கபீர்தாஸ் தயாரிப்பில் எம்.சுந்தர் இயக்கத்தில் அஜிதேஜ், ஶ்ரீஸ்வேதா, பாக்கியராஜ், நமோ நாராயணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அந்த 7 நாட்கள்”. விண்வெளி ஆராய்ச்சியாளரான கதாநாயகன் அஜிதேஜுவுக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தையா விண்வெள் தொலைநோக்கு கருவி (டெலஸ்கோப்) ஒன்று கிடைக்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சூரிய கிரகணத்தின் தன்மையை ஆய்வு செய்ய அவருக்கு கிடைத்த பழங்காலத்து தொலைநோக்கு கருவியின் மூலம் சூரிய கிரகணத்தை பார்க்கிறார். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் மற்றவர்கள் மரணிக்கும் எதிர்காலத்தை அறிந்து கொள்கிறார். மற்றவர்களின் கண்களைப்பார்த்து அவர்கள் மரணிக்கும் நேரத்தையும் முன்கூட்டியே அஜிதேஜ் சொல்லிவிடுகிறார். அவர் சொன்ன நேரத்தில் அவர்களுக்கும் மரணம் சம்பவிக்கிறது. ஒருமுறை அஜிதேஜ் தான் காதலிக்கும் ஶ்ரீஸ்வேதாவின் கண்களை பார்க்கிறார். இன்னும் 7 நாட்களில் ஶ்ரீஸ்வேதாவும் மரணிக்கப்போவதை தெரிந்து கொள்கிறார். அந்த மரணதிலிருந்து தன் காதலியை காப்பாற்றினாரா இல்லையா? என்பதுதான் கதை. இது ஒரு உண்மைக் காதலின் உணர்வுபூர்வமான கதை. காதலின் எல்லையை தொட்டக்கதை. காதலுக்காக கஷ்ட்டப்படுவதை வரமாக நினைக்கும் காதலர்களின் கதை. அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அஜிதேஜின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்த்துவிட்டன. அவரின் நடிப்புக்கு சற்றும் குறைவின்றி ஈடுகொடுத்து நடித்துள்ளார் கதாநாயகி ஶ்ரீஸ்வேதா. வெறிநாய் கடித்ததில் நாயாகவே மாறி சாகப்போகும் நிலையை படம்பார்ப்பவர்களின் கண்முன்னே தற்ரூபமாக காட்டி நம்மை கதிகலங்க செய்துவிட்டார். அபாரமான நடிப்பு. அமைச்சராக வரும் பாக்கியராஜ் தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் நிறைகிறார். அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன் வழக்கமான நகைச்சுவை நடிப்பிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு புதிய கோணத்தில் நடித்து அசத்துகிறார். ஒரு காதல் காவியத்தை வித்தியாசமான் கோணத்தில் படம்பிடித்து காட்டியிருக்கும் இயக்குநர் எம். சுந்தர் பாராட்டுதலுக்குரியவர்.