“ரைட்” திரைப்பட விமர்சனம்

திருமால் லட்சுமணன், சியாமளா ஆகியோரின் தயாரிப்பில் சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், அருணாண்டியன், அக்‌ஷரா ரெட்டி, மூணார் ரமேஷ், விநோதினி, ஆதித்யா, யுவினோ பார்தவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரைட்” சென்னையிலுள்ள் ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருக்கும் நட்டி நட்ராஜ் பிரதமர் வருகையின் பாதுகாப்புக்காக சென்றுவிடுகிறார். அந்த நேரத்தில் அந்த காவல் நிலையத்தை சுற்றிலும் வெடிகுண்டுகளை புதைத்து வைத்து, காவல் நிலையத்துக்கு உள்ளே சென்றவர்கள் வெளியே வந்தால் குண்டு வெடித்து சாகும்படியான தானியங்கி கதிர்வீச்சி மூலம் ஒரு மர்ம மனிதன் தன்கட்டுப்பாட்டில் வைத்துள்ளான். அந்த காவல் நிலையத்துக்கு தன் மகனை காணவில்லை என்று புகார் கொடுக்க அருண்பாண்டியன் வருகிறார். அதே காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் அக்‌ஷ்ரா ரெட்டி தனது திருமண அழைப்பிதழை கொடுக்க காவல் நிலையத்துக்கு வருகிறார். காவல் நிலையத்தில் சில காவலர்களும் கைதிகளும் இருக்கிறார்கள். இப்போது இவர்கள் யாவரும் காவல் நிலையத்தைவிட்டு வெளியே செல்ல முடியாது. மீறி சென்றால் தானியங்கி கதிர்வீச்சி மூலம் குண்டு வெடித்து சாவார்கள். இதனால் பீதியடைந்து அனைவரும் உள்ளேயே இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த மர்ம மனிதன் ஒரு மடிக்கனணி மூலம் காவல் நிலையத்திலிருக்கும் காவலர்களுக்கு சில கட்டளைகளை பிறப்பிக்கிறான். அதன்படி நீதிபதி வினோதினியை வரச் சொல்ல கட்டளையிடுக்றான். அவரும் காவல்நிலையத்துக்கு வந்துவிடுகிறார். காவல்நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அந்த மர்ம மனிதன் யார்? எதற்காக? என்பதுதான் கதை. இப்படத்தில் நட்டி நடராஜ்தான் கதாநாயகன் என்றாலும் அவர் வரும் காட்சிகள் குறைவுதான். அதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. படம் முழுக்க அவர் வந்தால் படம் சுதப்பிவிடும். ஏனென்றால் கதை அப்படி. தன் மகள் தீக்கு இறையாகி கருகிக் கிடக்கும் காட்சியை பார்த்து அழுகின்ற நட்டி நட்ராஜ் படம் பார்ப்பவர்களின் அனுதாபங்களை அள்ளி செல்கிறார். மனிதர் தீப்பிளம்பாக காட்சியளிக்கிறார். மகனை காணாமல் போன அப்பாவின் பதற்றத்தை அருண்பாண்டியன் அப்படியே படம்பிடித்து காட்டுகிறார். அவரின் பதற்றமும் அப்பாவித்தனமான உடல் மொழியும் படத்துக்கி பலம் சேர்க்கிறது. ஒரு காவல்நிலையத்துக்குள்ளேயே முழுப்படத்தையும் முடித்திருக்கும் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்அடுத்தடுத்த காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறார்.