‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் மற்றும் பலரும் நடிக்கிறார்கள் தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.

