வினோத் குமார் தயாரிப்பில் சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஹர்சத்கான், ஷிவாத்மிகா, ராஜசேகர், மெஹா ஆகாஷ், வி.டி.வி.கணேஷ், துளசி, சந்தானபாரதி, சிபி ஜெயக்குமார், நம்மிர்தா, ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஆராமலே”. கிஷன் தாஸ் பாடசாலை படிப்பிலும் கல்லூரி படிப்பிலும் காதலில் தோல்வி காண்கிறார். காதலித்து திருமணம் செய்து கொள்வதுதான் சிறந்தது என்ற லட்சியத்தோடு இருக்கிறார். இதனால் அவருக்கும் தந்தை பாண்டியனுக்கும் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. ஆனால் அம்மா துளசி மீது அளவு கடந்த பாசமுடையவர். அவரது பேச்சைக்கேட்டு தந்தை பாண்டியன் சிபாரிசு செய்த வேலைக்கு செல்கிறார் கிஷன் தாஸ். அது ஒரு பிரபலமான திருமணங்கள் செய்துவைக்கும் குழுமமாகும். (மேட்ரிமோனி). அந்த குழுமத்தின் மேலாளராக ஷிவாத்மிகா இருக்கிறார். அவரைப் பார்த்ததும் கிஷன் தாஸ் ஷிவாத்மிகா அழகில் மயங்கி காதல்வசப்படுகிறார். ஆனால் ஷிவாத்மிகாவுக்கு காதல்மீது நம்பிக்கை இல்லாதவர். பெற்றோர்கள் பார்த்து முடித்துவைக்கும் திருமணமே சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர். காதல் திருமணம் சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர் கிஷன் தாஸ். இப்படி இருதுருவங்கள் கொண்ட தண்டவாளத்தில் பயணிப்பதுதான் இப்படத்தின் கதை. காதல் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும். அவர்களின் முந்தைய ரகசியங்களை நோண்டாதே .அது உன் மேல் வெறுப்பாக ஆகும். சொல்ல வேண்டும் என்றால் சமயம் வரும்போது அவர்களே சொல்வார்கள். இல்லாவிட்டால் உனக்கும் அது தேவை இல்லை என்ற படத்தின் அடிப்படை நோக்கம் மேன்மையானது திரைக்கதையில் பலர் பங்காற்றியதன் விளைவு, எழுத்து சிறப்பாக வந்திருகிறது . திருமண அலுவலகம் சம்மந்தப்பட்ட காட்சிகள் அபாரம். இயக்குனர் சாரங் தியாகுவின் படமாக்கல், கவுதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு இரண்டும் மிகச் சிறப்பு . போகப் போக இந்தப் படம் முப்பது வருடத்துக்கு முந்தைய காதல் படங்களைப் போலவே தேவை இல்லாமல் நீள்கிறது. 55 வயது ஆகி கல்யாணத்துக்கு ஏங்கும் நிலையிலும் ”உன் அம்மாவை வெளியே எங்காவது தங்க வைக்கலாம்” என்று சொல்லும் பெண்ணைப் புறக்கணிக்கும் மகன் கேரக்டர், சென்ற தலைமுறைகள் பெற்றோர் மேல் பாசமாக இருந்ததை சொல்வதோடு இன்றைய தலைமுறைக்கு சொல்லும் படிப்பினையாகவும் இருக்கிறது.
“ஆராமலே” திரைப்பட விமர்சனம்
