“போட்டோகிராபர்” திரைப்பட விமர்சனம்

அப்துல் பாசித் சையத் தயாரிப்பில் அஷ்ரஃப. எழுதி இயக்கியதோடு மட்டும் அல்லாமல் கதையின் நாயகனாகவும் நடித்த்கிருக்கும் படம் “போட்டோகிராபர்”. இவருடன் அனனி சாமிநாதன், கருணாகரன், உரியடி சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். பெரும் தொழிலதிபர் ஆடுகளம் நரேனின் மகன் அஷ்ரஃப். தனக்கென்ற தனித்துவமாக வாழ வேண்டும் என்று ஆசைபடுகிறார். புதுமையாக சாதிக்க வேண்டுமென்று எண்ணத்தில் இருக்கும் அஷ்ரஃப் கொடைக்கானலில் உள்ள ஒரு ஆபத்தான வனத்தில் ஒரு அதிசய தங்க மரம் இருப்பதுபோல் கனவு காண்கிறார். அந்த மரத்தை போட்டோ எடுக்க கொடைக்கானலுக்கு செல்கிறார். ஆனால் அந்த காட்டுக்குள் சென்றவர்கள் யாரும் இதுவரை உயிருடன் திரும்பவில்லை ஆகையால் அங்கு போகாதீர்கள் என்று பலபேர் அஷ்ரஃபுக்கு எச்சரிக்கை அஎய்கிறார்கள். அதையும் மீறி அஷ்ரஃப் அந்தக் காட்டுக்குள் சென்று விடுகிறார். சென்றவர் தங்க மரத்தை படம் பிடித்தாரா? முக்கியமாக உயிருடன் திரும்பி வந்தாரா? தங்க மரம் கனவில் வந்த மர்மம் என்ன? இவைகளை அதிர்வூட்டும் விதமாக சொல்கின்ற படம்தான் “போட்டோகிராபர்”.

திரைப்படம் முழுவதையும் தலையில் சும்மாடுகட்டி சுமந்திருக்கிறார் அஷ்ரஃப். கதைக்கேற்றவாறு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டை பெறுகிறார். மூளைச் சிதைவு அடைந்தவராக நடிக்கும் காட்சிகளில் தனது முழுத்திறமையும் வெளிப்படுத்தி இருக்கிறார். கதையின் நாயகியாக வரும் அனனி சுவாமிநாதன் குறையேதும் இல்லாமல் நிறைவாக செய்து வாங்கிய சன்மானத்துக்கு வஞ்சனை இல்லாமல் நடித்திருக்கிறார்.  படத்தின் இரண்டாம் பகுதியில் அஷ்ரஃப்பின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி,  இருண்ட காட்டுப்பகுதில் முழநிலா வெளிச்சமாக பிரகாசிக்கிறார். “வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்” என்ற பாடலை எழுதிய கவிஞர் காமு.ஷெரிப் நம் நினைவுக்கு வந்து போகிறார். தனது அனுபவ நடிப்பை அழகாக வெளிபடுத்தியிருக்கிறார் ஆடுகளம் நரேன். ஏனைய நடிகர்களும் தங்களது திறமைகளை வெளிக்காட்ட  தவறவில்லை.. ஒளிப்பதிவாளர் ரயீஸ் அஹ்மத்தின் கடின உழைப்பு படத்தில் தெரிகிறது. படத்தொகுப்பாளர் பிரணவ் சில இடங்களில் கவனக் குறைவாக இருந்தாலும் பல காட்சிகளை நிறைவாக செய்திருக்கிறார்.