நான்கு மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘வவ்வால்’*

“வவ்வால் ” திரைப்படம் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை ஒன்றிணைத்து, ‘ஆன்டிமாண்ட்ஸ்’ என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக தயாராக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இந்தபடத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது , வவ்வால் இரவில்தான் அதிகம் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இந்த படத்திலும் இரவில் உலவும்  மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை சுவாரஸ்யமாகவும்  எடுத்திருக்கிறார்கள்..********

தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில் இருந்து லெவின் சைமன் மற்றும் மணிகண்டன், மற்றும் சுதி கோப்பா, கோகுலன், பிரவீன் டிஜே, மெரின் ஜோஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் ஷாமன் பி. பரேலில் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 2026 இல் வரவிருக்கும் பெரிய படங்களின் பட்டியலில் ‘வவ்வால்’ திரைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.