இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. கோபாலன் மற்றும் சிங்காரம் ஆகியோர் இணைந்து நாசருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “தாசரதியை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். அவருடைய அப்பா பிரபல டைரக்டர் பீம்சிங்கின் இணை இயக்குநர், எழுத்தாளர், திரு.எம்பார் வேதம் இணை இயக்குனர் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி எனக்கு ரொம்பவே பழக்கம். அவருடைய இளமை பதிப்பாகத்தான் நான் தாசரதியை பார்க்கிறேன்.. திரையுலகம் ஒரு இக்கட்டான சூழலை சந்தித்தபோது முதல் ஆளாக நின்று அதற்காக போராடியவர் அவர். அப்படி போராடக் கூடிய குணத்தை ஒரு போதையாக எங்களுக்குள் வளர்த்தவர் அவரது தந்தை.. அவரது மகனும் அவருக்கு தப்பாமல் இருக்கிறார் என்பதில் ரொம்ப மகிழ்ச்சி..*********
நடிகர் தாசரதி நடத்தும் முதியோர் இல்லத்தின் 25வது ஆண்டு விழா
